குட்டிக்கவிதை

எந்தன் காதல் உன் மீது இப்போது கனக்கின்றது
பொழுதுகள் நமக்காக திரிபடைகின்றது...

நாட்களும் நகர கனவுகளும் இனிக்கின்றது
எண்ணங்களில் ஏழுநூறு ஆசைகள் பல வண்ணங்களாக பிறக்கின்றது...

பேசப்பேச பாஷைகளும் பூக்கின்றது
உன்னோடு மட்டுமே இருந்திடப் பிடிக்கின்றது...

குட்டி மலர் பார்த்திட நாட்கள் இன்னமும் நீளுகின்றது
எண்ணிய நாட்களை எண்ணி எண்ணி எண்ணங்கள் அலை பாய்கின்றது...

என் நாட்குறிப்பும் கவிதைகளால் நிரம்பி விட்டது
என் கவிதைகளும் என்னைப்பார்த்து ரசிக்கின்றது...

எழுதியவர் : பர்ஷான் (27-Jun-18, 9:50 pm)
சேர்த்தது : பர்ஷான்
பார்வை : 108

மேலே