நந்தன் வெளிப்பட்டான்
அந்தணனும் தீண்டத் தகாதவான் என்றனன்
அக்கினியும் தீண்ட முடியாமல் நின்றது
நந்தன் வெளிப்பட்டான் முப்பிரிவெண் நூலுடன்
நர்த்தனன் பொற்சபையி னில் .
கவிக்குறிப்பு : பக்தன் நந்தன் சரித்திரத்தின் உச்சகட்ட பகுதி
அந்தணர் மறுத்த போது ஆண்டவன் வேள்வித் தீயில் புகுந்து
வருமாறு பக்தனை பணிக்கிறான் . இறை ஆணையை சிரம் மேல் ஏற்று
வேள்வித் தீயில் புகுந்து வெண் நீறும் வெண் முப்புரி நூலுடனும்
வெளிப்படுகிறான் பக்தன் நந்தன் .
உள்ளிருப்பதற்கு பேதமில்லை வெளியிலும் அவன் இப்பொழுது
உன்னவனே என்று நர்த்தக நாடக ஆடலரசன் அவர்களுக்கு
எடுத்துக் காட்டுகிறான் .பள்ளியில் படித்த சேக்கிழாரின்
பெரிய புராண நினைவிலிருந்து தந்திருக்கிறேன்
பெரியபுராணத்தில் இக்கட்சியின் வரிகள் தெரிந்தால் சொல்லலாம் .
தீக்குள் விரலை வைத்தால் உன்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா என்று பாடுவான் பாரதி .
அக்கினி நந்தனுக்கு அந்த இன்பத்தைத் தந்திருக்கும்