எந்நேரமும் உந்தன் - தேவகாந்தாரி
பல்லவி
எந்நேரமும் உந்தன் சந்நிதியிலேநா னிருக்கவேணுமையா
அநுபல்லவி
தென்னஞ்சோலை தழைக்கும் தென்புலியூர்
பொன்னம்பலத்தரசே யென்னரசே [எந்நேர]
சரணம்
திசையெங்கனும் புக ழுஞ்சிவ கங்கையும்
தேவசபை யுஞ்சிவ காமி தரிசனமும்
பசியெடா துபார்த்த பேர்க்குக் கலக்கங்கள்
பறந்திட மகிழ்ந்துன்னைப் பாடிக்கொண்டு [எந்நேர]
பஞ்சாட் சரப்படி யுங்கொடிக் கம்பமும்
கோவி லழகும் அரிதான ரகசியமும்
அஞ்சேல்கூறும் வீர மணிகளோசையும்
அந்தக்கரண மயக்கந் தீர்ந்து பாடிக்கொண்டு [எந்நேர]
சீலமருவுந்தெரு வுந்திருக்கூட்டமும்
தேரருலகில்கிடை யாதவசியமும்
பாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும்
பயங்கள் தீர்ந்து மலர்கள் தூவித் தொழுது கொண்டு [எந்நேர]
M. S. Subbulakshmi 04 - Enneramumu Undhan - Devagandhari_3m 50s
Enneramum விஜய சிவா
Enneramum - Gopalakrishna Bharathi ஸ்ரீராமகிருஷ்ண மூர்த்தி (சரணங்கள் மூன்றும் கேட்கலாம்)