263 சான்று சொல்ல வேண்டிய இடம் தவிர்த்து குற்றம் கூறுதல் தகாது – புறங்கூறல் 5
வஞ்சி விருத்தம்
ஆட்சி யாமுல கரசன்முன்
சாட்சி சொல்சமை யத்தலான்
மாட்சி யோர்பிறர் மறுவினை
நீட்சி யாநிகழ்த் தார்களே. 5
– புறங்கூறல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”உலகாளும் வேந்தன் முன் சான்று சொல்லும்போது மட்டும் பிறர் குற்றத்தை எடுத்துச் சொல்லும் மாண்புடைய பெரியோர்கள், பிறரின் குற்றமுடைய செயல்களை வேறு எவ்விடத்தும் எக்காலத்தும் எடுத்துச் சொல்ல மாட்டார்கள்” என்றும், வேறு இடங்களில் குற்றம் கூறுதல் தகாது என்றும் இப்பாடலாசிரியர் கூறுகிறார் .
.
ஆட்சி - ஆளுவது. மறு - குற்றம். நிகழ்த்தார் - சொல்லார்.