நட்பு

துன்பம் வந்து மொய்க்கையில்
ஆறுதல் விசிறி வீசும்
துவண்டு நொந்து கிடக்கையில்
உற்சாக மலர்கள் தூவும்
மகிழ்வில் மிதக்கையில்
பூபாள நாதம் இசைக்கும்
அழுகையில் அழுது சிரிக்கையில் சிரித்து
வாழ்வின் ஆதியிலும் வரும் மீதியிலும்
எப்போதும் நன்றாக எங்கேயும் ஒன்றாக
அசையாத வேராக அகலாத மரமாக
இரண்டறக் கலந்து கிடப்பதே நட்பு

அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (28-Jun-18, 1:05 pm)
Tanglish : natpu
பார்வை : 1057

மேலே