எப்படி உன்னுடைய காதல்

வெறுமையாக இருந்த என்னை
நீ இல்லா வெறுமை
என்றால் என்ன என்று
சிந்திக்க வைத்தாய்
நொடிப் பொழுதில் மறக்க முடியா
நியாபகங்கள் தந்து உடலால்
தூரம் உள்ள நீ
நினைவால் நெருங்கி வந்தாய்
முத்தங்களுக்கு இலக்கணம் வகுத்த
நீ காதலுக்கு இலக்கணம்
வகுத்தவர்களை உதறித்
தள்ளினாய்
காமத்திற்கும் காதலுக்கும் கோடுகள்
பிரிக்காமல் பாலங்களைக் கட்டி
காமத்திலும் காதல் கண்டாய்
அதில் என்னை வதைக்காமல்
வதைத்து உண்டாய்
அவ்வப்போது காதலின் உவர்ப்புகளை
கண்ணீரில் காட்டிய நீ
இன்பங்களை மட்டும் நான்
வசிக்கும் இதயத்திலேயே வைத்துக்கொண்டாய்
ஐப்பானியர்கள் கோபத்தை சிரிப்பில்
காட்டுவது போல் உன் கோபத்தை
என் உதடுகளில் காட்டி வந்தாய்
வடுவின் சுவையையும் ருசிக்க வைத்தாய்