அவள்

பஞ்சாமிருத கலவையில்
மா,பலா,வாழைப்பழங்கள்
இவை சுவைத்தரும் மாகனிகளே
ஆயின் இக்கலவைக்கு தேன் சேராது
போயின் கலவை அமிர்தம் ஆவதில்லை
பெண்ணே,இறைவன் உன்னை
இப்படியோர் பேரழகியாய்ப் படைத்தான்
என்று நான் சிந்திக்கையில் உந்தன்
பேசும் கண்கள் தனித்தே தெரிந்து
தான்தான் உன்னை வடிவுக்கு
அரசியாய் ஆகியதென்று.சொன்னது..

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Jun-18, 10:38 am)
பார்வை : 40

மேலே