வினைப்பயன்

#வினைப்பயன்

இரவுகளைக் கண்டும்
உறங்காத மனம்
போதையேறி,
போக்கிரித் தனத்தோடு
பேதையவளின்
வருகைக்கு கூகையாகி,

திக்கற்றுத் திசைமாறிச்
செல்லும் பறவைகளைப் போலேயல்லாமல்,
மனிதமிருகம் கூகையாக உறங்கியும்
உறங்காமலும் இருந்து,

வீதிசெல்லும் பட்சிகளை
எல்லாம் வெறிபிடித்து
அந்தரங்கங்களை அசை
போடுகிறது,
அரசு மின்விளக்குகள்
எரிந்தும் எரியாமலும் மின்னிமின்னி இருக்க,

அந்த நாமுக்குச் சந்திப்பில்
நடமாட்டமற்று வெறிச்சோடி
இருள் பொதிந்திருக்க,
ஒரு பக்கமிருந்து அன்னக்கிளியொன்று,
விழிகளில் பயத்துடனும்
மனதில் ஏக்கத்துடனும்
பெருமூச்சுவிட்டு இடப்பக்கம் திரும்ப பயம் சூழ்ந்த
மனதை சுமந்து நடந்துவர,

வலப்புறம்
கொலுசொலியுணர்ந்த
கூகை எழுந்து
குறுக்காக நோக்க,
கிளியின் பிம்பம் விளக்கொளியில்
மின்னிமின்னி மறைகிறது,

ஒளிந்திருந்த கூகை கிளியின்
நடமாட்டத்தை உணர்ந்து,
அருகிலிருந்த சிறுகல்லை
எடுத்துவீச,
சப்தமில்லா சாலையில்
ஒலிகேட்டு நடை
வேகப்படுத்திய கிளி
இடப்புறம் திரும்ப முயல,

கண்ணிமைக்கும் நொடியில்
வலப்புறமிருந்து வேகமாக
வந்த ஓர் மகிழுந்துவின்
கோரப்பசிக்கு தூக்கி வீசப்பட,
வீசப்பட்ட
கிளியின் குருதியும்
காற்றில் பறந்து தெரிக்க,

மகிழுந்து அதீத
வேகத்தில் மாயமாக,
பீதியடைந்த கூகையும்
தரிகெட்டு பழம்
நழுவியதை நினைந்தோட,
திடீரென தொப் என்ற
ஓர் சத்தம்,

நுரைத்துப் பொங்கும்
பாதாளத்தில் சிக்கிய,
கூகையின் கூச்சல்
கேட்காத ஊரும் உறங்க,
கூகை ஏற்படுத்திய
பயத்தின் பயனாக
பாதாளத்தின் பசி தீர்ந்தது,

பயம் கருவிகளைவிட
அழிவு ஏற்படுத்தும்
மீப்பெரு ஆயுதம்.

எழுதியவர் : தமிழினியன் (30-Jun-18, 6:03 pm)
பார்வை : 155

மேலே