ரஞ்சனி டாக்ஸி கொலை வழக்கு

கெஸ்பெவா (Krsbewa) இல் இருந்து பண்டாரகமாவுக்கு (Bandaragama) 10 கி. மீ சைக்கிளில் தினமும் போய் பொருட்களை விற்கும் வியாபாரி அலோ சிங்கோ 1953 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் திகதி திங்கட்கிழமை காலை சைக்கிளில் பண்டாரகம நோக்கி போகும் போது வழிப்போக்கர்கள் தங்கிப்போகும் கிண்டில்பிட்டிய (Kindelpitiya) கிராமத்தில் உள்ள அம்பலமவைத் தாண்டி 150 யார் மட்டில் சென்றபோது
ஒரு கருமை நிறமுள்ள மொரிஸ் மைனர் கார் பாதை ஓரத்தில் நிற்பதைக் கண்டான் . காரின் டிரைவர் சீட் கதவு திறந்திருந்து. அருகே போய் அலோ சிங்கோ பார்த்த போது ஒருவன் தலையில் இரத்ததோடு இறந்து கிடந்தான். அந்த சம்பவம் நடந்த இடத்தில வீடுகள் இருக்கவில்லை டிரைவர் சீட்டின் நிலத்தில் இரத்தம் படிந்து இருந்தது . டிரைவரின் ஒரு பொருளும் திருடப்படவில்லை . தாமதியாமல் அலோ சிங்கோ உடனடியாக கிந்துல்பிட்டிய கிராம விதானையாரிடம் தான் கண்ட காட்சியை சொன்னான். விதானையார் மேதியாஸ் சில்வா விபரத்தை குறித்துக்கொண்டு இருவரும் கார் நின்ற இடத்துக்கு சென்றனர். கொலை நடந்த இடம் பண்டாரகம நகர எல்லைக்குள் இருந்ததால் மேதியாஸ் சில்வா பண்டாரகம நோக்கி போகும் ஒரு வாகனத்தின் டிரைவரிடம் பொலீசுக்கு செய்தியை சொல்லி அனுப்பினார். அதே சமயம் வந்து கொண்டிருந்த காமினி பஸ் சேவை வாகனத்தின் டிரைவர், இறந்து கிடந்தவர் ரஞ்ஜினி டாக்ஸி சேர்விசின் டிரைவர் அல்பேர்ட் பெரேரா என அடையாலம் கண்டார். மொரிஸ் மைனர் காரின் பின் பக்கத்தில் பெரிய ஆங்கில எழுத்துகளில் ரஞ்ஜினி கப்ஸ் ( Ranjani Cabs) என்று எழுதி இருந்தது . அல்பேர்ட் பெரேரா இறந்த செய்தி கொஹுவெலவில் இருந்த ரஞ்ஜினி டக்ஸி செர்விசின் முதலாளி குணதாசாவுக்கு போய் சேர்ந்தது. அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமான அல்பேர்ட்டின் மறைவு செய்தி அறிந்து அதிர்படைந்த குணதாசா ஓவென்று அழுது விட்டார். உடனே உடல் இருந்த இடத்து சென்று அவர்பார்த்த போது அல்பேர்ட்டின் முதுகில் துப்பாக்கிச் சூட்டினாலும், வயிற்றிலும், நெஞ்சிலும் சரமாரியான கத்தி குத்துக் காயத்தாலும் படு கொடூரமாக சிலரால் கொலை செய்யப்பட்டிருக்கிறான் என அவருக்கு விளங்கியது தன் டக்ஸி சேவை விரைவாக வளர்வதற்கு காரணமாக இருந்த ஆல்பேர்ட் மேல் பொறாமை கொண்ட ஒருவர் செய்த கொலை என்பதை அறிந்து கொள்ள அவருக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. ஏற்கனவே காமினி பஸ் சர்வீஸ் முதலாளி எஸ் டி ஜெயசிங்கவைன் யின் தம்பி ஆராச்சிரால எப்படிப் பட்டவன் என்பது குணதாசாவுக்கு தெரியும். ஜான் சில்வா கொலை வழக்கில் அவன் நான்காம் குற்றவாளியாக இருந்து ,போதிய ஆதாரம் இல்லாததால் விடுதலையானான். அவனுக்கு எதிராக பல வழக்குகள் இருந்தும் சட்டம் அவனை ஒன்றும் செய்யமுடியவில்லை அல்பேர்ட்டை தன் அண்ணனின் காமினி பஸ் சேர்விசில் கண்டக்டராக வந்து சேரும் படி ஆராச்சிரால கேட்டதாயும் அதுக்கு அல்பர்ட் முடியாது என்று அவருக்கு பதில் சொன்னதும் குணதாசாவுக்குத் தெரியும் . சிலமாதங்களுக்குப் பின் திரும்பவும் ஆராச்சிரால நடத்தும் வீனஸ் டக்ஸி சேர்விசில் கூடிய சம்பளத்தில் மேற்பார்வையாளராக வந்து சேரும் படி அராச்சிரால கேட்டதாயும் அதற்கும் அல்பர்ட் முடியாது என்று சொன்ன விபரமும் குணதாசாவுக்கு தெரியும்.
“அல்பர்ட் உனக்கு விருப்பம் இருந்தால் நீ வீனஸ் டக்ஸி சேர்விசில் போய் சேர்” என்று அவர் சொன்னதுக்கு அவன் “முதலாளி நல்ல மனம் உள்ள உங்களை விட்டு நான் போக மாட்டேன் . இந்த ரஞ்ஜினி டக்ஸி சேர்வீசை நீங்களும் நானும் சேர்ந்து வளர்த்தனாங்கள். உங்களை போல் நல்ல முதலாளி எனக்கு வரப்போவதில்லை” என்று அல்பர்ட் பெரும் தன்மையாகச் சொன்னது அவர் நினைவுக்கு வந்தது. தன் மனதில் உள்ளதை பொலீசை தவிர வேறு ஒருவரிடமும் அதைப் பற்றி அவர் பேசவில்லை .
பண்டார்கம போலீஸ் வந்து சம்பவம் நடந்த இடத்தில விசாரணை நடத்திய் போது டக்ஸி மீட்டர் 22.50 காட்டியபடி நின்றது. ஆகஸ்ட் 2 ஆம் இரவு கொழும்பு 7 இல் நடந்த வாடிகையாளர்களை கொரோனேஸன் கார்ணிவலில் (Coronation Carnival) இருந்து வாடிகையளர்களை டக்ஸி அவர்கள் போகும் இடத்துக்கு அல்பர்ட் ஏற்றி செல்வது வழமை . ஆகவே கொலை நடந்த இடத்துக்கு கொழும்பு 7 இல் இருந்து இரவு 1௦ மணிக்கு மேல் டக்ஸியில் பயணம் செய்தால் வரும் தொகை அது என்பதை போலீசுக்கு கணக்கிட்டு குணதாசா சொன்னார் . அல்பேர்ட் மடியில் கட்டி இருந்த பையில் 55.19ரூபாயுக்கு நோட்டுகளும் சில்லரையும் இருந்தன. அது திருட்டு போகவில்லை. அதோடு துப்பாக்கி சூட்டாலும், பல கத்தி குத்துக்காயங்கலாலும் அல்பர்ட் இறந்தது தெரிய வந்தது. கொலை செய்தது ஒருவருக்கு மேல் எனப் புலனாயிற்று . கொலைகாரர்களின் முக்கிய நோக்கம் கொலை செய்துவிட்டு வெகு விரைவாகத் தப்பித்து செல்வது என்பததே . அல்பேர்ட்டின் கையில் இருந்த கைக் கடிகாரத்தைக் காணவில்லை. அதை மட்டும் கொலைகாரர்களில் ஒருவன் எடுத்துச் சென்று விட்டான் . மூன்று மாதத்துக்குப் பின் அல்பெர்ட்டின் கைக்கடிகாரம் முதலாம் குற்றவாளியான புதுனீஸ் வீட்டில் கண்டு பிடிக்கப் பட்டது

பண்டாரகம சப் இன்ஸ்பெக்டர் பாணதுறை போலீஸ் உதவி சுப்பீரிண்டெண்டனுக்கு கொலை பற்றிய விபரம் அறிவித்து கைரேகை நிபுணர் ஒருவரை அனுப்பும் படி கேட்டுக் கொண்டார் . அல்பர்ட் ஓட்டிச் சென்று கொலை செய்யப்பட்ட ரஞ்சினி டக்ஸி ஒரு புது கருப்பு நிற EL 1956 நம்பர் தகடு பதித்த கார்.

பாணதுறை குற்றப் புலனாய்வு இன்ஸ்பெக்டர் குமாரசாமி விசாரணையை ஆரம்பித்தார். இவர் ஒரு அனுபவம் உள்ள இன்ஸ்பெக்டர். அரசியல் வாதிகளின் தலையீட்டுக்கு இடம் விட்டு கொடுக்காதவர். பிரேத பரிசோதனை வைத்திய அதிகாரி விஜயசேகரா இரண்டு மணித்தியாலம் நடத்தினார் . ஆறு துப்பாக்கி சூடுகளும் 6 கத்தி குத்து 12 உள்காயங்களும் கொலை செய்யப்பட்ட 38 வயதுடைய. அல்பேர்ட் என்பவரின் உடலில் இருந்தது . அதில் இரு கத்திகாயங்கள் கொலை செய்யப்பட்டவர் தன்னை பாதுகாக்க டக்சியில் டிரைவர் சீட்டுக்கு முன் தற் பாதுகாப்புக்கு வைத்திருந்த தனது கத்தியை எடுக்க முயற்சித்த போது 6 கத்தி குத்து காயங்களில் இறந்தவர் கையில் 2 காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்பதை எடுத்துக்காட்டியது . இரவு 11 மணியளவில் அல்பேர்ட் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என டாக்டர் தன் அறிக்கையில் சொன்னார். மரணம் இரத்தப் பெருக்காலும், அதிர்ச்சியாலும் நடந்திருக்கிறது என்றும், சுமார் பத்து நிமிடங்கள் கொலையாளிகளோடு போராடிய பின்னரே அல்பெர்ட்டின் உயிர் பிரிந்திருக்கிறது என வைத்தியரின் அறிக்கை சொல்லிற்று
குணதாசாவின் கடையில் உதவியாளனாக இருக்கும் ஜினதாசா என்பவன் இரவு பதினோரு மணி அளவில் அல்பேர்ட் காரில் மூவரை ஏற்றிக்கோண்டு கெஸ்பேவா நோக்கி போவதைக் கண்டதாக சாட்சியம் அளிக்கும் போது சொன்னான்.

போலீஸ் விசாரணயின் போது ஆகஸ்ட் 2 ஆம் திகதி இரவு கொரநேசன் கார்ணிவலில்( Coronation Carnival) இருந்து பலரை டக்ஸியில் டிரிப்பில் அல்பர்ட் ஏற்றி சென்றதாகவும் . அப்படி டிரிப்பில் சென்ற ஒரு கூட்டம் தான் அந்த கொலையை செய்து இருக்கவேண்டும் என்று ரஞ்ஜினி டக்ஸி டிரைவர் லென் அப்புஹாமி சொன்னான்.
அடிக்கடி ஆராச்சிரால வீட்டுக்கு போய் வரும் கோடா வில்சன் என்பவனை விசாரித்த போது ஆராச்சிராலவுடன் நெருக்கமாக உள்ள கவேனிசுக்கு இந்த கொலை பற்றி விபரம் தெரிந்திருக்கலாம் என வில்சன் சொன்னான். 27 வயதுடைய கவேனிஸ் என்பவனுக்கு பல வருடங்களாக ஆராச்சிராலாவைத் தெரியும். இன்ஸ்பெக்டர் குமாரசாமி கவேனிசைத் தீவீரமாக விசாரித்த போது ஆராச்சிராலவுக்கு அல்பர்ட்மேல் வீனஸ் டக்ஸி செர்விசில் தன் அழைப்பினை ஏற்று சேராததை இட்டு அதிக கோபம் இருந்ததாகவும், அல்பர்ட்டை தீர்த்துக் கட்டினால் வீனஸ் டக்ஸி சேவையின் வருமானம் அதிகரிக்கும் என்று தனக்கு சொன்னதாகவும் கவேனிஸ் சொன்னான் .

அதற்கான திட்டத்தை ஆராச்சிராலவே வகுத்தார் என்று கவேனஸ் போலீசுக்கு சொன்னான் . கொலை செய்யவும் தயங்காத புதுனிஸ், எடின் என்ற வில்பர்ட் , நேபோ சிங்கோ அகிய மூவருக்கு 1000 ரூபாய் பணம் கொடுத்து ஆராச்சிரால அல்பேர்டை கொலை செய்ததாக கவேனிஸ் போலீசுக்கு சொன்னான்.
கொலை எப்படி நடந்தது என்ற விபரம் சொல்ல முடியுமா என்று இன்ஸ்பெக்டர் குமாரசாமி அவனிடம் கேட்ட பொது.
அதற்கு கவேனிஸ் “ சேர் ஆகஸ்ட் 2 ம் திகதி இரவு .
. புதுனிஸ், வில்பர்ட் . நேபோ சிங்கோ ஆகிய மூவரும் அல்பெர்டின் டக்சியை நிறுத்தி அதில் கேஸ்பேபாவில் உள்ள தங்கள் வீடுகளுக்குப் போய் கார்ணிவளில் டொம்போலா விளையாட பணம் எடுத்துக் கொண்டு திரும்பி வர மூவரும் கேட்டதாகவும், அந்த பயணம் இரவு பத்து மணிக்கு மேல் போக வேண்டிய டக்ஸி பயணம் என்ற படியால் அதில் இருந்து பெரும் தொகை வரும் என்பதால் அல்பேர்ட் அந்த டக்ஸி பயணத்துக்கு சம்மதித்தான். அல்பேர்டுக்குத் தெரியாது அதுவே தனது இறுதி பயணம் என்று. டிரைவர் சீட்டுக்கு நேரே பின் சீட்டில், பாக்கெட்டில் கைத்துப்பாக்கியோடு புதுனிசும் அவனுக்குப் பக்கத்தில் பின் சீட்டில் நேபோ சிங்கோவும். முன் சீட்டில் டிரைவர் அல்பெர்ட்டுக்கு பக்கத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியோடு வில்பர்ட்டும் டக்சியில் பயணம் செய்தனர். அவர்கள் சென்று ஒரு மணி நேரத்துக்குப் பின் ஆராச்சிரால தான் போட்டத் திட்டம் சரியாக நடந்திருக்கிறதா என்று பார்த்து வர தன்னோடு கிண்டில்பிட்டியாவுக்கு வரும் படி கேட்டார். தாங்கள் இருவரும் கிண்டில்பிட்டிய கிராமத்துக்கு போனபோது ரஞ்சனி டாக்ஸியின் டிரைவர் சீட்டில் அல்பர்ட் இறந்து கிடைத்ததை ஆராச்சிராலா மாத்தையா கண்டு திருப்தி அடைந்து “கபெனுஸ் காரியம் வெற்றியாக முடிந்து விட்டது வா திரும்பிப் போவோம்: என்று சொல்லி கொழும்புக்கு திரும்பவும் என்னை கூட்டி வந்தார்” என்றான் கபெனுஸ் .

கபெனுசின் பாதுகாப்பு கருதி போலீஸ் நீர்கொழும்பில் அவனை விலக்கு மறியலில் வழக்கு முடியும் மட்டும் வைத்திருந்தது. கபெனுஸ் அரச தரப்பு சாட்சியாக மாறியதால் அவன் மேல் வழக்கு தொடரப் படவில்லை .
புதுனிஸ் முதலாம் குற்றவாளியாகவும் , எட்டின் என்ற வில்பர்ட் இரண்டாம் குற்றவாளியாகவும் , நெப்போ சிங்கோ மூன்றம் குற்றவாளியாகவும் கொலைத் திட்டம் போட்டுக் கொடுத்த ஆராச்சிரால நான்காம் குற்றவாளியாகவும் வழக்கு தொடர்ப்பட்டது. வர்கள் கைது செய்யப் பட்டு தடுப்பு மறியலில் தீர்ப்பு சொல்லும் மட்டும் வைக்கப் பட்டனர் . முதல் மூன்று குற்றவாளிகளும் ஆல்பர்டை ஒன்றாக சேர்ந்து கொலை செய்ததற்காகவும் . நன்காம் குற்றவாளி ஆல்பர்டின் மேல் உள்ள கோபத்தால் அவனை கொலை செய்யத் திட்டம் தீட்டி பணம் கொடுத்து முதல் மூன்று குற்றவாளிகளைக் கொண்டு கொலை செய்ததுக்கும் குற்றம் சாட்டப்பட்டனர்
****
ஒரு காலத்தில் மது விலக்கு இன்ஸ்பெக்டராக இருந்து பின் சாரயத் தவறணைகள் நடத்தியவனுமான ஓசி கொரியா (Ossie Corea) என்பவன் குற்றங்கள் பல புரிந்த சண்டியன். இலங்கையின் முன்னைய பிரதமர் பண்டாரநாயக்கா கொலை வழக்கு, கலத்தாவ கொலைகள் வழக்கு ஆகியவற்றோடு தொடரப்புள்ளவன். அவனும் நான்காம் முற்றவாளியான ஆராச்சிகோராலாவும் நண்பர்கள். ஓசி கொரியா வெலிகட ஜெயிலுக்கு சென்று கபேனுசை சந்தித்து அவன் கொடுத்த வாக்குமூலத்தை மாற்ற முயற்சித்தான் அனால் முடியவில்லை.
நான்கு குற்றவாளிகள் மேல் வழக்குகள் ஒரு வருட விசாரணைக்குப் பின் கொழும்பு நீதி மன்றத்தில் 1954 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் திகதி ஆரம்பித்து டிசம்பர் 23 ஆம் திகதி முடிந்தது
முதலாம் குற்றவாளிக்கு பிரபல குற்றவியல் வழக்கறிஞரும் தமிழ் அரசியல்வாதியும், இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவருமான ஜீ ஜீ பொன்னம்பலம் ஆஜரானார். வழக்கறிஞருக்கான செலவை ஆராச்சிராலாவின் அண்ணனும், காமினி பஸ் சேவையின் உரிமையாளரும், ஒரு காலத்தில் ஐக்கிய தேசீய கடசியிம் முக்கிய புள்ளியும் தேஹிவல - கல்கிஸ்ஸ நகரபிதாவாக இருந்த எஸ் டி ஜெயசிங்கா செலவு செய்திருப்பார் என்பதை பலரும் அறிந்ததே
பல குற்றவியல் வழக்குகளில் ஜீ ஜீ பொன்னம்பலம் சாட்சிகளை தனது ஊடுருவும் பார்வையோடு குறுக்கு விசாரணை செய்யும் போது, சாட்சி நடந்த உண்மையை மறந்து விடுவான். அதே யுக்தி அவர் இந்த வழக்கிலும் கையாண்டார். வழக்கில் பதிவு செய்யப்பட்ட விசாரணையின் 3500 பக்கங்களில் 1170 பக்கங்கள் இங்கிலாந்தில் இருந்து வந்த கைரேகை நிபுணரை பல நாட்கள் குறுக்கு விசாரனயி செய்து கைரேகை நிபுணரின் அறிக்கை நம்பிக்கையற்றது என்பதை ஜூரிகளின் மனதில் தோற்றுவித்தார் வழக்கறிஞர் ஜீ ஜீ பொன்னம்பலம். வழக்கு ஆரம்பிக்க முன் கைரேகை பதிவு பற்றி நன்றாகப் படித்து வந்திருந்தார். அவர் வழக்கறிஞராக முன் ஒரு அறிவியலில் பட்டம் பெற்றவர் . புத்தி கூர்மையுள்ளவர். எந்தக் கோணத்தில் இருந்து சுடப்பட்டது, எந்த ரக ரிவோல்வர் பாவிக்கப்பட்டது. எந்த வேகத்தில் குண்டுகள் சென்றன? எவ்வளவு ஆழமாக குண்டுகள் ஊடலில் சென்றுள்ளது, போன்ற நுணுக்கமான கேள்விகளை கைரேகை நிபுணரிடம் கேட்டு கைரேகை பற்றி அதிகம் தெரியாத ஜூரிகளின் மனதைக் குழப்பி அடித்து விட்டார் வழக்கறிஞர் ஜீ ஜீ பொன்னம்பலம். இவ்வளவு கேள்விகளும் அவசியமா என்று நீதிபாதி குறுக்கிட்டு தடுத்து இருக்கலாம். அனால் அவர் அதை செய்யவில்லை. முடிவு ஜூரிகலின் தீர்ப்பு ஏகமனதாக நான்கு குற்றவளிகளுக்கு சாதகமாக இருந்தது . குற்றவாளிகள் நால்வரும் விடுதலை செய்யப்பட்டார்கள் . பொதுமக்களும். ஊடகங்களும் ஜூரிகளின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லை .
அல்பெர்டின் உயிரை அவர்கள் தான் கொலை செய்தார்கள் என்று தெரிந்து இருந்தும் பணத்துக்காக அவர்களை காத்ததினல் கர்மாவை தேடிகொண்டார் வழக்கறிஞர் ஜீ ஜீ பொன்னம்பலம். அது அவரின் மகன் வழக்கறிஞர் குமார் பொன்னம்பலத்தை பாதிதது . 2000 ஆண்டு குமார் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இது போன்று கலத்தலாவ கொலைகள் செய்த அல்பிரேட் டி சொயிசாவின் மகன் வசந்த சொயிசாவும், கொலை செய்யப்பட்டான்.

*****

எழுதியவர் : பொன் குலேந்தின் - கனடா (2-Jul-18, 7:58 am)
பார்வை : 144

மேலே