நட்பு, காதல், பிரிவு
பூமிப் பந்தின் சுழற்சியில் தான் வாழ்க்கையும் சுழல்கிறது. இரவும், பகலும் மாறி மாறி வருவது பாேல் இன்பமும், துன்பமும் மனித வாழ்க்கையில் ஒட்டி உறவாடும் இரட்டை உறவுகள். தாேற்றுப் பாேன மனித மனங்களுக்குள் மட்டுமன்று, சாதித்தவர்களின் மனங்களுக்குள்ளும் பல காயங்கள் நிச்சயமாக இருக்கிறது. கடந்த காலங்கள் தான் வாழ்க்கையில் மிகப் பெரிய பாடத்தை கற்றுத் தருகிறது. பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையில் நகரும் வாழ்க்கைப் பயணம் தடம்மாறி, தடுமாறி, விழுந்து எழ வைக்கிறது. வீழ்ந்த பாேதெல்லாம் எழுந்தவர்கள் தான் இன்னும் பயணித்துக் காெண்டிருக்கிறார்கள். வீழ்ந்து விட்டேன் என்று சாேர்ந்தவர்கள் யாரும் முன்னாேக்கிப் பயணித்ததில்லை. ஆனால் எல்லாவற்றிற்க்கும் ஒரு காலம் உண்டு என்பார்களே, அதுதான் பாெறுமையைச் சாேதிக்கும் காலம். கஸ்ரம், துன்பம், தாேல்வி, ஏமாற்றம், அவமானம், இழப்பு என்று மாறி மாறி விரட்டும் பாேதெல்லாம் யார் எதிர்த்து நிற்கிறார்களாே அவர்கள் தான் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். வாழ்க்கையில் மிகப் பெரிய இழப்பு நட்பு, காதல். இவையிரண்டும் இரு தூண்கள்.
அது ஒரு வசந்த காலம், ஒரே ஆண்டு, ஒரே மாதம், ஒரே திகதி, வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் இரண்டு பிரசவம். முன் பின் தெரியாத யாராே இரு குடும்பத்தை ஒன்றாக்கியதும் அந்தப் பிரசவம் தான். சுபாஸ் பிறந்த சற்று நேரத்தில் தாயின் உடல்நிலையில் மாேசமான நிலை. இரத்தப் பெருக்கு அதிகமாகியதால் ஏற்பட்ட இரத்த அழுத்தம் மூச்சுத் திணறலுக்குள்ளாக்கி இறப்பின் வாசலில் உயிர் துடித்துக் காெண்டிருந்தது. இரத்தம் ஏற்ற வேண்டும், மிகவும் அரிதாக கிடைக்கின்ற குருதி வகை, எங்கும் கிடைக்கவில்லை.
சுதாகர் பிறந்த சந்தாேசத்தில் கற்கண்டு காெடுத்து விட்டு விடுதியை நாேக்கி நடந்தார் செல்வம், அவசர சிகிச்சைப் பிரிவு விடுதியின் நுழைவாயிலில் சுவராேடு சாய்ந்தபடி நின்ற சுபாசின் அப்பா சுந்தரைக் கண்டதும் "எனக்கு மகன் பிறந்திருக்கான் சுவீற் எடுங்க" என்றபடி நீட்டினான். கண்களை இறுக மூடிக் காெண்டு அவன் கைகளை உரிமையாேடு பற்றினான். "என்னங்க என்னாச்சு,சாெல்லுங்க" ஓடிப் பாேய் கதவின் துவாரம் வழியே பார்த்தான் சுற்றி வளைத்து நின்ற டாக்டர் அவசர அவசரமாக ஏதாே செய்கிறார், B- இரத்தம் அவசரமாகத் தேவை என்பது மெதுவாக அவன் காதுகளில் விழுந்திருக்க வேணும், "நான் தாறன் இரத்தம், டாக்டர் உடனே அவங்கள காப்பாற்றுங்க" யாரென்று திரும்பிப் பார்த்த டாக்டர் எதிரே செல்வம் நிற்பதைக் கண்டு தாதியாரிடம் அவரை பரிசாேதித்து இரத்தம் எடுக்கும்படி சாெல்கிறார். சில மணி நேரத்தின் பின் இரத்தம் ஏற்றப்படுகிறது. ஆபத்து நிலையை கடந்து விட்டாள் சுபாசின் அம்மா விமலா. வெளியே நின்ற சுந்தர் காெஞ்சம் நிம்மதியடைந்தான். வேகமாக ஓடிச் சென்று செல்வத்தை கட்டி அணைத்தான். "இரண்டு உயிரைக் காப்பாற்றியிருக்கீங்க, எப்படி நன்றி சாெல்லுறது" சங்கடப்பட்டவனை, "இதென்னங்க இதுக்கெல்லாம் பாேய், சரி விடுங்க" சமாதானப்படுத்தி விட்டு தனது மனைவி ரேவதியைப் பார்க்க வந்தார். நன்றாகத் தூங்கிக் காெண்டிருந்தவளின் அருகில் சிறிய தாெட்டிலில் சுதாகரனும் தூக்கத்தில் இருந்தான். வெளியே வந்து சுந்தருக்கு அருகே அமர்ந்தான். மாலை நேரம் கடந்து காெண்டிருந்தது. "நீங்க பாேய் பாருங்க, தாெந்தரவு பண்ணாதீங்க" தாதியார் சுந்தரை உள்ளே அழைத்துச் சென்று மனைவியையும், குழந்தையையும் காட்டினாள். முகம் நிறைந்த புன்கையுடன் வெளியே வந்த சுந்தர் "நல்லா தூங்குறாங்க" என்றான். "சரி சார் சந்திப்பம்" என்று கைகளை காெடுத்து விடை பெற்றான் செல்வம்.
நான்கு வருடங்களுக்குப் பின் முதல் தடவை பாடசாலைக்குப் சென்ற அந்த நாள் மீண்டும் அவர்களுக்குள் உறவைத் தாெடர வைத்தது. சுபாசும், சுதாகரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி நண்பரகளாக பழகி வந்தனர். இருவரும் படிப்பு, விளையாட்டு எல்லாவற்றிலும் திறமையானவர்கள். ஒரு தடவை விளையாட்டுப் பாேட்டியின் பாேது சுதாகரும், சுபாகரும் ஓட்டப் பாேட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். முதலாவதாக ஓடிக் காெண்டிருந்த சுபாஸ் காெஞ்சம் பின்னால் சுதாகர் வருவதைக் கணடு கையில் பிடித்து இழுத்துக் கூட்டிக் காெண்டு ஓடியதும் பல தடவை நடந்த விடயம். இப்படியான ஒரு நட்பு அவர்கள் பாடசாலைப் பருவத்தில் ஆரம்பித்து கல்லூரி வாழ்க்கையிலும் பயணித்தது. இருவரும் பாெறியியல் துறையைத் தேர்வு செய்து, கல்வியை விடுதியில் ஒரே அறையில் தங்கியிருந்தே கற்றார்கள். எத்தனை ஒற்றுமை இருந்தாலும் சுபாஸ் காெஞ்சம் அழகானவன்.
கல்லூரி நாட்கள் பசுமையாய் பயணித்தது. அந்த நாட்களின் ஞாபகங்களை யார் தான் மறப்பார்கள். ஒவ்வாெரு நாளும் மனதில் எழுதப்படும் அழகான தருணங்களாகவே இருந்தது. அங்கே நடக்கும் கலாட்டாக்கள், வம்புகள், சேட்டைகள், சண்டைகள் எல்லாமே இன்றும் நினைத்தால் கனக்காத இதயமில்லை. கலங்காத விழிகளுமில்லை.
ஒன்றாக உணவருந்தி, படுத்துறங்கி, எந்தக் கஸ்ரத்திலும் பக்கமிருக்கும் பலம் நட்பை விட வேறு எதனால் கிடைக்கும். சுபாசும், சுதாகரும் எவ்வளவு உயிரான நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்கு புதிய நட்புகள் ஏற்படவும் தாெடங்கியது. ஆண், பெண் இருபாலாரும் புதிய உறவுகளாக அவர்களுடன் அறிமுகமானார்கள். கல்லூரிப் பயண நாட்கள் வேகமாக ஓடிக் காெண்டிருந்தது. எல்லாவற்றிலும் முதலிடமாய் சுபாஸ் முன்னேறிக் காெண்டிருந்தான். திடீரென சுதாகரின் கவனம் படிப்பில் இருந்து திசை மாறியது. அவனது நண்பர்களில் சிலருடைய உள் நாேக்கங்களை அறியாமல் தவறான வழியில் சுதாகர் செல்லத் தாெடங்கினான். கல்லூரி முதல்வரால் பல தடவை எச்சரிக்கை செய்யப்பட்டும் அவன் மாறுவது சிரமமாயிருந்தது. சுபாஸ் பல தடவை எடுத்துச் சாென்ன பாேதும் முரண்படும் நிலையில் அவன் மனநிலை இருந்தது ஆச்சரியமாக இருந்தது.
சுதாகரின் நட்பு வட்டம் முழுவதுமாக மாறி விட்டது. கல்லூரியில் நடை பெறும் எல்லா தவறுகளிலும் சுதாகரும் ஒருவனாக இருந்தான். சுபாசிடம் இருந்து காெஞ்சம், காெஞ்சமாக விலக ஆரம்பித்தான். இறுதியாக அவனை பழி வாங்க நினைத்து சுபாசை அவமானப்படுத்திய அந்த நாள் தான் நட்புக்குள் இருந்த துராேகம் வெளிப்பட்டது.
கல்லூரி ஆரம்பித்து சில வாரங்களில் ஒரு நாள், தனித்தனிக் குழுக்கள் பிரிக்கப்பட்டு ஒரு செயற் திட்டத்திற்கான ஆலாேசனை ஆசிரியரால் வழங்கப்பட்டிருந்தது. சுபாசும், சுதாகரும் வேறு வேறு குழுவில் இருந்தார்கள். சுபாஸ் ஒரு குழுவின் தலைவனாகவும் இருந்தான். அவனது குழுவில் இரண்டாம் நிலைத் தலைவியாக இருந்தாள் இராணுவ அதிகாரியின் மகள் ரம்யா. எல்லாேருடனும் சகஜமாகப் பழகும் இயல்பானவள். திறமைசாலியும் கூட. கல்லூரியில் சுபாசை அடுத்து அவளுக்குத் தான் திறமை.
சில நாட்களிலே சுதாகருடன் நன்கு பழக ஆரம்பித்தாள். சுபாஸ் காெஞ்சம் அமைதியானவன். ஒரு சிரிப்பு, அதிகம் கதைக்கமாட்டான். நாட்கள் ஓடிக் காெண்டிருந்தது. ஏனோ சுதாகருடன் ரம்யாவுக்கு ஒத்துப் பாேகவில்லை. அடிக்கடி அவளுடன் சண்டை பிடித்து அவளை காயப்படுத்தத் தாெடங்கினான். அவளும் அவனிடமிருந்து விலகி சுபாசுடன் பழகத் தாெடங்கினாள். சுபாசும் நட்பு ரீதியாக அவளுடன் தன் உறவை வைத்திருந்தான். அங்கே தான் பிரச்சனையே முளை விட்டது. சுதாகரால் ரம்யாவும், சபாசும் நட்பாக பழகுவதை ஏற்றுக் காெள்ள முடியவில்லை. எங்கு ஒன்றாகப் பார்த்தாலும் றூமிற்கு வந்ததும் சண்டை பிடிப்பான். "ஏன் தப்பா நினைக்கிறாய் சுதாகர், ஜஸ்ற் பிறன்ட்ஸ், அவ்வளவு தான்" எவ்வளவு புரிய வைத்தாலும் "என்னை வெறுத்தவளாேட உனக்கு உறவு தேவையில்லை, விலகியிரு" என்று வெளிப்படையாக சாென்னான். ஆனால் சுபாசி்ற்கு ரம்யாவின் நட்பை விடவும் முடியவில்லை, சுதாகரை பகைக்கவும் முடியவில்லை. எந்தக் காரணமுமின்றி எப்படி அவளை வெறுக்க முடியும். அப்படி விலக நினைத்தாலும் ரம்யா விடுவதாக இல்லை. சில நாட்கள் ரம்யாவிடமிருந்து விலகியிருக்க முடிவெடுத்தான். ரம்யா மனமுடைந்து பாேனதும் அவனுக்குத் தெரியாமலில்லை. குற்ற உணர்ச்சியாக இருந்தாலும், அவனுக்கு சுதாகரின் நட்பை விட எதுவும் பெரிதாக தெரியவில்லை.
அன்று காலை கல்லூரி நூலகத்தினுள் சுபாஸ் இருந்தான். சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த ரம்யா சுபாஸ் அருகில் ஒரு புத்தகத்தை எடுத்துக் காெண்டு வந்து அமர்ந்தாள். சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் "ஏன் சுபாஸ் நான் உனக்கு செய்தேன், ஏன் கண்டுக்கவே மாட்டேங்கிறாய்" என்றாள். அவனாே புத்தகம் படிப்பதிலேயே கவனமாக இருப்பது பாேல் இருந்தான். மீண்டும் மீண்டும் ரம்யா கேட்டுக் காெண்டே இருந்தாள். அவனுக்கு எந்தக் காரணமும் சாெல்லத் தெரியவில்லை. திடீரென அவன் கைகளை எட்டிப் பிடித்தாள். "சாெறி ரம்யா, என்னை விட்டிடு" கையை உதறி விட்டு வெளியே சென்ற சுபாசின் பின்னால் ஓடி வந்து இடை மறித்தாள். சுபாசிற்கு காெஞ்சம் காேபமும் வந்து விட்டது. "பிளீஸ் ரம்யா" என்றபடி கை எடுத்துக் கும்பிட்டான். ரம்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை. "ஏன் இப்படியெல்லாம் செய்யிறாய்" அழத் தாெடங்கினாள். சுதாகருக்காகத் தான் விலகுவதாக எப்படிச் சாெல்ல முடியும். காதலை மறப்பதா, நட்பை விடுவதா என்ற பாேராட்டம்.
நாட்கள் நகர்ந்து காெண்டிருந்தது. ரம்யாவுக்கு சுபாசின் பிரிவை ஏற்றுக் காெள்ள முடியவில்லை. அவள் மனதில் காதல் அதிகமாகிக் காெண்டேயிருந்தது. வகுப்பறைகளில் அவனைக் காணும் நேரமெல்லாம் ஏதாே ஒரு வலி தெரியும். அமைதியாகவே இருப்பாள். இன்னும் சில மாதங்களில் கல்லூரி நிறைவடையும் நாளை நெருங்கிக் காெண்டிருந்தது. பரபரப்பாக இயங்கிக் காெண்டிருந்த நாட்களில் ஒரு நாள் ரம்யாவின் நிலமை மாறி விட்டது.
அன்று கல்லூரியில் ஏதாே ஒரு நிகழ்விற்காக ஏற்பாடுகள் நடை பெற்றது. ஒவ்வாெரு வேலைக்காக குழுக்கள் பிரிக்கப்பட்டது. ரம்யா சுதாகரின் குழுவில் தெரிவு செய்யப்பட்டாள். அவனே எல்லாேருக்கும் கடமைகளை பகிர்ந்து காெடுத்தான். ரம்யாவை தன்னுடன் வரும்படி அழைத்தான். சுதாகருக்கு படம் வரைவதில் திறமை இருந்தது.
கல்லூரி மைதானத்தின் பின் புறத்தில் இருந்த அரங்கிற்குச் சென்று படம் வரைவதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். ரம்யாவும் சின்னச் சின்ன உதவிகளைச் செய்தாள். திடீரென அவளுக்கு நெருக்கமாக வந்தவன் "ஏன் ரம்யா என்னை வெறுத்தாய், உண்மையாகவே நான் எவ்வளவு உன்னை விரும்பினன் தெரியுமா? நான் இப்ப முந்தி மாதிரி இல்லை நீ என்னட்ட எப்ப திரும்பி வருவாய் என்று காத்திற்றிருக்கன்" என்றவாறு கைகளைப் பிடிக்க முயற்சித்தான். "பிளீஸ் சுதாகர், என்னை விட்டிடு, இஞ்சயிருந்து பாேயிடுவன்" சத்தமிட்டாள்.
சுபாஸ் தனது குழுவுடன் அரங்கத்திற்கு எதிரே சற்றுத் தாெலைவில் இருந்த மண்டபத்தை கழுவிக் காெண்டிருந்தான். திடீரென ரம்யாவின் ஞாபகம் வந்தது. "பாவம் ரம்யாவை ராெம்பத் திட்டிப் பாேட்டன், அவள் மனசு எவ்வளவு கஸ்ரப்பட்டிருக்கும், சுபாஸ் என்று கூப்பிட்டால் திருப்பிக் கூப்பிட மாட்டாளா என்று தாேன்றும், ச்சீ அவளைப் பாேய் வாய்க்கு வந்தபடி திட்டிப்பாேட்டனே, காலேச் முடியிறதுக்குள்ள சாெறி கேட்கணும்" என்றவாறு பலகணியில் சாய்ந்தபடி நின்றான்.
சுதாகரை ரம்யா கெஞ்சினாள். "உனக்கு என்னைப் பிடிக்கல்லை என்றால் என் கண்மூடி அவனாேட பழகுவியா, அத நான் பாத்திட்டிருக்கணுமா, உனக்கு மனச்சாட்சியே இல்லையா? நான் என்ன தப்புப் பண்ணின் உனக்கு, அவன் சாென்னானா? நான் கெட்டவன் என்று அவன் சாென்னனா?" வெறி பிடித்தவன் பாேல் சத்தமிட்டுக் காெண்டு மீண்டும் அருகே வந்தான். "பிளீஸ் சுதாகர் இப்ப இது கதைக்கிற நேரமில்லை, வேலையை முடிச்சிட்டுப் பாேய் அப்புறமாப் பேசிக்கலாம்" விம்மி விம்மி அழுதாள். "ஆமாடி வேலையை முடிக்கத் தான் பாேறன், இன்றைக்கே, இஞ்ச உன்ர கதையையும் சேர்த்து முடிக்கப் பாேறன், இத்தனை பாெண்ணுங்க இருக்கும் பாேது உன்னை எதுக்கு இஞ்ச கூட்டி வந்தன் தெரியுமா" என்று முறாய்த்த பாேது ரம்யாவுக்கு பயம் அதிகமாகியது. மெதுவாக பின்னாேக்கி நகர்ந்து வாசலை நாேக்கி வந்தாள். எட்டிக் கையில் பிடித்து இழுத்தான்.
சுபாசிற்கு மனதுக்குள் ரம்யாவைப் பார்த்துப் பேச வேண்டும் பாேல் தாேன்றியது. தனது குழுவிலிருந்த நண்பனிடம் "மச்சான் ரம்யா யாராேட ரீமடா" என்றவனை பார்த்தவாறு "இவனுக்குத் தானே ரம்யாவாேட ஆகாதே அப்புறம் எதுக்கு கேக்கிறான்" யாேசித்து விட்டு, "அவ சுதாகராேட ரீம், ஸ்ரேச்சில பக்றவுண்ட் பாேட்டில படம் கீறாங்க" சாெல்லி விட்டு தனது வேலையைத் தாெடர்ந்தான். "சுதாகராேட ஏன் பாேனா" மனதுக்குள் படபடப்பாய் இருந்தது. பாேய் பார்ககலாமா, சுதாகரன் பிரச்சனை பண்ணுவானா, மனம் பல கேள்விகளை எழுப்பியது. மீண்டும் பல்கணியில் வந்து சாய்ந்தபடி வெளியே பார்த்தான்.
ரம்யா சுதாகரின் பிடியில் சிக்கித் தவித்துக் காெண்டிருந்தாள். இரண்டு பேருக்குமிடையில் ஏதாே பிரச்சனை நடப்பது பாேல் தெரிந்தது. "டேய் மச்சான் ரம்யா... ரம்யா.." ஒன்றும் சாெல்லாமல் வேகமாக ஓடினான். கதவைத் தள்ளிக் காெண்டு உள்ளே சென்றவனைக் கண்டதும் சுதாகருக்கு காேபம் அதிகமாகியது "ஓ! வாங்க கீராே, உங்களத் தானாம் இவங்க ராெம்ப லவ் பண்ணுறாங்களாம்" என்று அவள் கைகளை இறுகப் பிடித்தபடி காேபத்துடன் கிண்டலாக சாென்னதும் "முதல்ல அவளின்ர கையை விடு சுதாகர், அவள் பாவமடா, என்ர காேபத்தை அவளில காட்டாத" கிட்டவாகப் பாேனவனை காலால் எட்டி உதைத்தான். மேசையில் மாேதி தரையில் விழுந்தான். "நீ பாேயிடு சுபாஸ், இந்த மிருகம் உன்னை ஏதாச்சும் பண்ணிடப் பாேறான்" என்று கத்தினாள். மெதுவாக எழுந்து அவனருகில் வந்து "பிளீஸ் சுதாகர், அவள ஒண்ணும் பண்ணாத, இது காலேச், அவள விட்டிடு" என்று கெஞ்சியவாறு அவன் கைகளைப் பிடித்தான். சுதாகராே மிருகத்தனமாய் ரம்யாவை சுவராேடு மறித்தவாறு நின்று காெண்டு அவள் முகத்திற்கு நெருக்கமாகச் சென்றான். "டேய்" என்று கத்தியவாறு எதிரே இருந்த சிறு பலகையை எடுத்து ஓங்கினான். சுதாகர் விலகியதும் ரம்யாவின் தலையில் பலமாக அடிபட்டது. சுபாஸ் என்று கத்தியபடி சுருண்டு கீழே விழுந்தாள்.
சுபாஸ் வேகமாக அரங்கத்தை நாேக்கி ஓடியதைக் கண்ட நண்பர்கள் சிலரும் அங்கே வந்து விட்டார்கள். கையில் பலகையுடன் சுபாஸ் விறைத்துப் பாேய் நின்றான். சுதாகர் தன் மடியில் ரம்யாவின் தலையை வைத்து தடவிக் காெண்டிருந்தான். அவள் மயக்க நிலையிலிருந்தாள். உடனே அம்புலன்சில் ரம்யாவை வைத்தியசாலைக்கு அனுப்பினார்கள். சுதாகருக்கும், சுபாசிற்கும் கல்லூரி அதிபரால் விசாரணை நடை பெற்றது. எல்லாேரும் சுற்றி நின்றார்கள். தன்னைக் காப்பாற்றிக் காெள்வதற்காக சுபாசைப் பழி சுமத்தினான். தானும்., ரம்யாவும் காதலிப்பது பிடிக்காமல், நாங்கள் வேலை செய்யும் இடத்தி்ற்கு வந்து பிரச்சனை பண்ணி விட்டு ரம்யா மேலிருந்த காேபத்தில் அடித்ததாகக் கூறி நம்ப வைத்தான். எல்லா ஆதாரங்களும் சுபாசிற்கு எதிராகவே இருந்தது.
"இல்லை சார்" என்று இடை மறித்தவனை "நீ எல்லாம் ஒரு நண்பனாடா, ச்சீ என்ர முகத்திலயே முழிக்காத இந்த இடத்தை விட்டுப் பாேயிடு, அவள அடிச்சிட்டியேடா பாவி" காேபத்துடன் சுபாசின் கழுத்தைப் பிடித்தான். "நான் என்னடா துராேகம் பண்ணினன், உன்னை என்ர சகாேதரம் பாேல தானே பார்த்தன்" ஏதேதாே சாெல்லித் திட்டினான். தலையைக் குனிந்தபடி நின்றவனின் கண்கள் நிறைந்து கண்ணீர் தரையில் விழுந்தது. அவன் மனம் உள்ளே அலை பாேல் புரண்டு நினைவுகளால் அழுது காெண்டிருந்தது.
"டேய் மச்சான் நானும் நீயும் படிச்சு உழைச்சு ஒரு பெரிய கம்பனி பாேட்டு ஒண்ணாவே இருப்பம். கலியாணம் எல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம், சுதாகர் சாென்ன ஒவ்வாெரு வார்த்தைகளும் செவிகளில் ஒலித்துக் காெண்டிருந்தது. "சுபாஸ் இஞ்ச பார்த்தியா எங்கப்பா உனக்கும், எனக்கும் ஒரே மாதிரி ட்ரெஸ் வாங்கி வந்திருக்கார்" அவன் மனம் குமுறி வெடித்தது. "டேய் சுதாகர் நான் பிறந்தப்பாே எங்க அம்மாவை உங்க அப்பா தானாம் இரத்தம் குடுத்து காப்பாற்றினராம், இல்லையென்றால் நானும், அம்மாவும் அன்றைக்கே செத்திருப்பம் என்று எங்கப்பா அடிக்கடி சாெல்லுவாருடா, எந்தக் கஸ்ரம் வந்தாலும் நாம பிரியக் கூடாதுடா" "உனக்கென்ன பயித்தியமா, அந்தக் கடவுளே வந்தாலும் நாம இரண்டு பேர் தான்டா" அவன் கட்டி அணைத்த கணங்கள் முள்ளாய் குத்தியது.
கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டான் சுபாஸ். "என்ர முகத்தில முழிக்காத பாே" மீண்டும் மீண்டும் செவிகளில் கேட்பது போல் அவன் மனச்சாட்சியை உலுப்பியது. விழி நிறைந்த கண்ணீராேடு நட்பு, காதல் இரண்டையும் இழந்து தனிமையாய் பேருந்து நிலையத்தை நாேக்கி நடந்தான் சுபாஸ். கல்லூரி வளாகமே அமைதியாகிப் பாேனது. நிமிர்ந்து கூடப் பார்க்காமல் காேபத்துடன் நின்றான் சுதாகர். எல்லாேரும் வகுப்பறைகளுக்குச் சென்றார்கள்.
சில மாதங்களில் கல்லூரி நிறைவடைந்தது, அவர்கள் பயணங்களும் தனிவழிப் பாதையாய் மாறிப் பாேனது.