தாத்தா பாட்டி
தாத்தா-பாட்டி
இழக்கக் கூடாத மாபெரும் பொக்கிஷங்கள் இவர்கள்.
சமர்ப்பணம் :
ராமநாத ஐயர்
பகவதி லட்சுமி அம்மாள்
சீனிவாச ஐயர்
காவேரி அம்மாள்
தாத்தா-பாட்டி.!!
வார்த்தையை சொல்லி முடிப்பதற்குள்
ஓடிவந்து ஒட்டிக் கொள்கிறது
இதமான ஆர்ப்பாட்டம் இல்லாத பாசம்..!!
யார் இவர்கள்.?
நமக்கு பொறுமையை சொல்லாமல் சொல்லும் தெய்வங்கள்..!!
நான் தான் உன்னைவிட நாகரிக ரீதியில் அதிகம் அறிந்தவள் என ஒரு மகள் தன் தாயிடம் சொன்னால் அங்கு வாக்குவாதம் வரும்..!!
என்னதான் பாசமிக்க தாய் மகளாயினும் அங்கு ஒரு சிறு கருத்துவேற்றுமைகள் நிலவும்..!!
தாய் மகள் உறவு என்றாலே
பிடிவாதம் இணைந்த பாசம்..!!
பாசம் இழைத்த(stiched) பிடிவாதம் தான்..!!
இதனையே
தாத்தா பாட்டியிடம்
அந்த மகள்(grand child)
அங்ஙனம் சொன்னால்
அவர்கள் முதலில் ஆம் என் ஒப்புக்கொண்டு
வார்த்தைகளே இல்லாமல் நடைமுறையில் உணர்த்துவார்கள் அவர்களே சாலச்சிறந்தவர்கள் என்று..!!!
ஒப்புக்கொள்ளும் குணம் நம்மை அவர்களிடம்
ஒட்டிக்கொள்ளச் செய்துவிடும்..!!
கல்லூரி காலம் தொடங்கியும்..
கூச்சமின்றி..
என் தாத்தாவின் கைப்பிடித்து
நான் நடந்ததைப் போன்ற
அன்யூன்யம்..
என் தாத்தா
என்னுடன் பேசுகையில்
என் அர்த்தமற்ற அடுத்தடுத்த கேள்விகளுக்கு
அவரின் பொறுமை நிறைந்த தெளிவான பதில்கள்..
நான் தவறு செய்தும் தவறில்லை என அன்னையுடன் சண்டையிடும் போதும்
"குழந்தையை திட்டாதே" என அவர் எனக்காய் வாதாடிய அக்கறை..
என அனைத்தும் வேறு யாரிடமும் காண முடியாது..!!
என் தாத்தாவின் பொறுமை தந்தைக்கு இல்லை..!!!
என் தந்தையின்
பொறுமை தம்பிக்கு
இல்லை..!!
என் தம்பியின்
பொறுமை
என் கணவருக்கு இருக்க வாய்ப்பில்லை..!!
என் கணவரின் பொறுமை
என் குழந்தைக்கு நிச்சயம் இருக்காது..!!
நாகரிக வளர்ச்சி என்ற பெயரில்
நல்வழி காட்டுபவர்களை இழந்து வருகிறோம்..!!
நூறு நூலகங்களை கற்றாலும் இவர்களின் அனுபவ அறிவிற்குமுன் அவை கடுகளவே..!!
கரூர் அருகே வாங்கல் என்ற ஊரே என் போதிமரம்..!!
என் தாத்தாவே
என் புத்தர்..!!
வாங்கல் வீட்டிலிருந்து
காவிரிக்கரை
கால்மணி தான் நடந்தால்..!!
நடத்தி அழைத்து செல்வார்..!!
வழிமுழுதும் வாழ்க்கை கதைகள் தான்..!!
அவர் அடிக்கடி சொல்லும் ஒரு வரி..
"பெருமாள பிடிச்சுக்கோ அவர் பாத்துப் பார்"
குணசீலப் பெருமாள் அவர் இஷ்ட தெய்வம்..!!
அவர் பள்ளிக்கூட ஆசிரியர்..!!
பள்ளி காலம் தொடங்கி காவிரி ஆற்றின் பூர்வீகம் என அனைத்தும் சொல்வார்..!!!
நடந்து செல்கையில் வழித்துணைக்கும்
வார்த்தைத் துணைக்கும் அனுபவமிக்க
அடுத்தடுத்த கேள்விகளுக்கு
அசராத பொறுமையின் பிம்பமாக ஒருத்தர் இருப்பின் வேறு எது வேண்டும்..!!????
தாத்தாவிடம் கொண்ட அன்யூன்யம் பாட்டியிடம் இல்லை..!!
இருக்காது இயல்பு தான்..!!
பாட்டி அடுப்பங்கரையை காட்டுவார்..!!
தாத்தா அடுத்த பக்க காவிரி ஆற்றின் கரையை ஆற்றில் இறங்கி கைப்பிடித்து கூட்டிச்சென்று காட்டுவார்..!!
தாத்தா பாட்டி முன்
தாய் தந்தை
வார்த்தைகளை
வடிகட்டி வீணே வீசாமல் வடிவமைத்து பேசுவார்கள்..!!
பெரியோர்
இருக்கிறார்கள் என்று மரியாதை..!!
ஒருவித ஆரோக்கியமான ஒழுங்குமுறை இருக்கும் அவர்கள் முன்..!!
நாள் கிழமை எனில்
என்ன செய்ய வேண்டும்
எப்படி செய்ய வேண்டும் என எடுத்துச் சொல்ல நாதி இருந்தது..!!
தாத்தா-பாட்டி
இருந்தவரை
இளவரசியைப்போல் தான் வளர்ந்தேன்..!!
2 வருடமாய்
பாட்டி படுக்கையாக இருந்தார்..!!
தாத்தா நல்ல உடல் கட்டு.. சுறுசுறுப்பானவர்.. நோயற்றவர்..!!
கல்லூரி காலம் தொடங்கி மார்கழி மாதம்..!!
இரவு நேரம் 3.00AM.. தொலைபேசி
மாறி மாறி மணியடுத்து தொல்லை செய்தது..!!
அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில்..!!
சிறு சத்தமாயினும் நான் கண்விழித்து பழக்கம்..!!
என் தொலைபேசியில் மாமாவிடமிருந்து அழைப்பு மொனமாய் ஒலியின்றி ஒளியுடன்..!!
சொல்லுங்கள் மாமா என்றேன்..!!
அப்பாவிடம் போன் குடுமா என்றார்..!!
அப்பாவை எழுப்பி கொடுத்தேன்..!!
நாங்கள் எதிர்ப்பார்த்தது தான்..(பாட்டியின் உடல்நிலை) என்ற தோனியில் அப்பா ஆர்ப்பாட்டம் இன்றி பேசினார்..!!
மாரடைப்பால் தாத்தா இறந்துவிட்டார் என்ற செய்தி..!!
எனக்கு விவரம் தெரிந்து நான் சந்தித்த முதல் நெருக்கமானவரின் இழப்பு என் தாத்தா..!!
அம்மா இரு நிமிடங்கள் அழுதுவிட்டு பிணத்தை எடுப்பதற்குள் செல்ல வேண்டும் என்றாள்..!!
முந்தைய நாள்
வாரமலரில் என் பெயரில் பரிசு வந்ததாய் தாத்தாவிடம் பேசினேன்..!!
நாராயண நாமம் ஆயிரத்தெட்டு முறை மாதம் ஒருமுறை சொல்லு என்றார்..!!
முந்தைய நாள் வரை அப்பா என்றவர் இறந்த செய்தி கேட்ட பத்து நிமிடத்தில் பிணம் என்கிறார்களே என்ற அதிர்ச்சியில் அமர்ந்தேன்..!!!
இவ்வளவு தான் மனித வாழ்க்கையா என்றானது..!!
கல்நெஞ்சக்காரி நான்..!! கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை..!!
அவர் சொன்னது போல் பெருமாளை பிடித்துக்கொண்டேன்..!!
மரண வைராக்கியம் என்பார்களே அதுதான் எனக்கு என் தாத்தா தந்தது..!!
தாத்தா பாட்டி...
பழுத்தவர்கள் அவர்கள்..!!
காயிலிருந்து(from strict-accept-routine) பழமாய்(flexible-peak patience-always supportive) மாற மறுக்கும் பெற்றோர்களைவிட..
பூவிலிருந்து(insane-fear to change-stick to softness) காயாய் மாற தயங்கும் இளஞ்சிட்டுகளை வழிநடத்த அவர்களே சாலச்சிறந்தவர்கள்..!!
உலகத்தில் உள்ள தாத்தா பாட்டி அனைவரும் இன்னும் பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் நன்கு வாழவேண்டும் என மனதார பிரார்த்திக்கிறேன்..!!
-இங்ஙனம்
ராமன்
லட்சுமணன்
பரதன்
குகன்
பசுபதி
அபிராமி
அம்பிகா