திருமணம்

பூக்களின் தரிசனம் வண்டுகள் தேட
இதழ்கள் நாணத்தில் ஆடும்
தேவதையின் விரல் பட்ட மலர் தண்டு
இலையாேடு உரசும்
மாெட்டுக்கள் முகம் சுழித்து வெட்கித்துப் பாேக
பனித்துளிகள் இதழ்களை முத்தமிடும்

மாலையுடன் மாங்கல்யம் மணமேடை ஏறும்
தாலியும், குங்குமமும் அக்கினி சாட்சியாய்
மங்கை அவள் கரம் பிடித்த மணாளனுடன்
மணம் காெள்வாள் மனதுருகி
ஓருயிர் ஈருடலாய் இல்லறம் சிறந்து
நல் நறுமண மலர்களாய் மலர்ந்திடும்
பந்தம் திருமணம் எனும் சாெர்க்கம்

எழுதியவர் : அபி றாெஸ்னி (1-Jul-18, 10:19 am)
Tanglish : thirumanam
பார்வை : 321

மேலே