அவள்
மின்னலென பளிச்சிடும்
முகத்தாள் அவள் -அவள்
முகத்தில் அத்தனை வசீகரம்
இதுவே அவளை நான் பார்த்த
முதல் பார்வை ;அவள் பார்வை
என் பார்வையில் சங்கமிக்க
சில நொடிகள் என் இமைகளை
மூடவைத்தது -மூடிய என் இமைகள்
திறந்து கொண்டு அவள் முகத்தை
மீண்டும் பார்க்க ,அவள் தேன் கிண்ண
இதழ்கள் செவ்வரளிப்பூப்போல் அலர்ந்திட
வெண் முத்துக்களாய் தெறித்தது அவள்
சிரிப்பு அது கடலலைபோல்
என்னைத் தன்னுள் இழுத்துக்கொண்டது
அவள் சிரிப்பின் அடிமை நான் இப்போது

