காசு

கையில் இல்லாதது
இருந்தாலும் நில்லாதது,
கனவை தருவது
கனவாகவே போவது,
காத்திருப்போர் பட்டியலை
நிர்ணயிப்பது,
மாந்தரையும், மாதரையும்
மரிடச்செய்வது,
மடங்களையும் மாளிகைகளையும்
மதிகெட்டோட செய்வது,
ஆளுமையையும்
அடிமையையும் அளவிடுவது,

ஏன் கடவுளையே
பார்த்திட உதவுவது
காசு இந்த காசு.....

எழுதியவர் : maavi (15-Aug-11, 5:22 pm)
சேர்த்தது : maavi
பார்வை : 261

மேலே