கடலோர கவிதை

கடலலைகள் ஓயாமல்
கடற்கரையில் மோதுகின்றன
ரக ரகமாய் உயிரற்ற சங்குப்பூச்சிகளின்
சங்குகள் குவிகின்றன .....
அவற்றை அள்ளி அள்ளி
சங்குகளாய் விற்று பணம்செய்கின்றனர்
சங்குப்பூச்சிகள் இறந்தாலும்
'ஆயிரம்'ரூபாய்'...............கடலலை கொண்டு
தள்ளும் உயிரற்ற மனித உடல்கள்
அகற்றிட செலவு ஆயிரங்கள்..............
மனிதனே உனக்கோ ஆணவம்.......

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Jul-18, 5:11 pm)
Tanglish : kadalora kavithai
பார்வை : 88

மேலே