வெற்றியின் பாதை

முயன்று அடையும் தாகம் இதுவே
வெற்றி வேண்டுமென்ற நோக்கம்
முண்டித் தள்ளி முன்னேற்றி
முதன்மை படியில் ஏற்றும்
வெற்றி பெற்றெடுக்கும் பேறு
அதில் திக்குமுக்காடும் மனது
ஆடம்பர ஆபரணம் இல்லை சுமந்திட
அன்றாட ஆடையென அணிந்திட
வெற்றி நெஞ்சில் குடியேறும்
வரலாற்றில் பெயரும் சேரும்
வாழ்வில் புது அர்த்தங்கள் பிறக்கும்
முதன்மை மீண்டும் பருகிட
வேண்டுமென்ற மோகம்
மனதில் ஆழ்ந்து தோன்றும்
நிலையாய் வென்று நின்றிட
கடமையை பணியாய் தொடர்ந்து செய்திட
அழுத்தங்கள் பனியாய் உருகிப்போகும்
பிரபலம் , என பெயரும் மாறும்
பலர் விழியில் வெற்றியின் முகங்கள், ஊர்வலம் போகும்
ரசிக கூட்டம் அலை அலையாய் மோதும்
கையோப்பம் பெற்று மன மகிழ்ச்சி அடையும்
சுகத்தை சுவாசித்து
உழைப்பை நீ மறக்க
வெற்றி மறைந்து
வெற்றிடம் நிரம்பும் .