நாளை யாதெனில்
நாளை என்பது கனவா?
இல்லை நம்பிக்கையா?
நாளை என்பது ஆசையா?
இல்லை வயோதிகமா?
இன்று மட்டுமே உண்மை என்றால் ...
பள்ளிகள் கடந்து
பாடங்களை குடைந்து
தேர்வுகள் கடந்து
இளமையை மறித்து
தோல்வியில் துவண்டு
உழைப்பில் கரைந்து
சில ஊக்கம் அருந்தி
பல ஓட்டம் பறந்து
பசியில் வறண்டு
தூக்கம் துரத்தி
ஏக்கம் கவ்வி
நோயில் உழன்று
துரோகம் கடந்து ..
நாளை நமக்கு
கண்முன்னே இருக்கு என
ஊசல் உயிரில் ஊன்றி நின்று
காத்து கிடக்கும்
பாமரனின் ஒரே
ஆறுதல் நாளை மட்டுமே ...