அறுத்தெறியலாம்

வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட
இருக்கிறாள் என் பச்சை தேவதை..
கருவறுக்கப்பட இருக்கிறார்கள்
அவள் குழந்தைகள் ...
ஆதிக்கத்தின் கூரிய நகங்கள்
அசாதாரணமான அவளின் நிலவொளி முகத்தில்
கீறலிட இருக்கின்றன கருமை நிற கோடுகளாய்...
புலித் தோல் போர்த்திய சிங்கங்களாய்,
அவளையும் அவளின் குழந்தைகளையும்
வேட்டையாட இருக்கின்றனர் கயவர்கள்..
அவள் பெண்ணுறுப்பில் வழிந்தோடப் போகும்
உதிரங்களுக்காய் காத்து நிற்கின்றனர் விலை ஆடவர்கள்..
விபச்சாரர்களே ..!
தொட்டு விடாதீர்கள் என் தேவதையை!
தேவதைத்தானே என நீங்கள் நினைக்கின்ற நேரத்தில்
அவள் மாறிப் போகலாம் காளியாகக்கூட..
பகைத்து விடாதீர்கள் அவள் குழந்தைகளை !
குழந்தைகள்தானே என நீங்கள் நினைக்கின்ற நேரத்தில்
அவர்கள் அறுத்தெறியலாம் உங்கள்
ஆதிக்கத்தின் பிறப்புறுப்பை...

எழுதியவர் : பா.நிபி (3-Jul-18, 2:13 pm)
சேர்த்தது : பா நிபி
பார்வை : 45

மேலே