மனைவிக்கு ஓர் கடிதம்
அறுபது வயதை
கடந்துவிட்டேன்..
ஆறுதல் தேடி
களைத்துவிட்டேன்..
சற்று கண்மூடி யோசித்தேன்
கடந்த காலங்கள்
என் நினைவில்..
திசைக்கொரு மூலையில் பிறந்து
திருமணத்தில் இணைந்தோம் நாம்..
ஆனால்
நம் இருமணமும்
இணையவில்லை
இன்று வரை..
உனக்காக நானும்
எனக்காக நீயும்
என்றுமே
மாறியதே இல்லை..
நம் இருவரைச் சுற்றியே
வலம் வந்தது
கருத்து வேறுபாடுகள்..
சந்தோஷம் கொண்டோமா என்றால்
சண்டைகளே கொண்டோம்..
ஆறுதல் அடைய
இரு பிள்ளைகள்
வாழ்க்கையும் ஓடியது..
வருடங்களும் ஓடியது..
இன்று பிள்ளைகளும்
ஆளுக்கொரு திசையில்
அவர்களது மணவாழ்வில்..
நாம் மரண வாசலைத் தொட
இன்னும் சில நாட்களே இருக்க..
இன்னும் ஏன் கோபம் நமக்கு?
மறந்துவிடுவோம்
மனக்கசப்பை..
புதுப்பிப்போம்
நம் உறவை..
தோழர்களாய்
இனி
உனக்கு நான் தோழன்..
எனக்கு நீ தோழி..
வாழ்வோம் வா..!