மரண வாயில்
பருவ வயதில் படரும், கொடி என நினைத்து படர்ந்தேன் காதலில்,
பக்குவம் அடையும் முன்னே கருகி விட்டேன்.
சாதி எனக்கு இடையூறு, அதனால் என்னவோ இறக்கும் பொது சத்தம் இடவில்லை
நான்!!!
பெற்றவளும் இல்லை, எனக்கு பேர் வைத்தவளும் இல்லை,
ஒரு முழம் கயிறு என் உயிரோடு உறவாடியது .....!
தவழ்ந்த என் தாய் மடி தெரியவில்லை , தலை நிமிர செய்த என் தந்தையும் நினைவில்லை ,
தடம் மாறிய என் காதல் வலிகள் மட்டும் உள்ளுக்குள்ளே....!
ஊர் கூடிய தருணம் அங்கு , நாவிற் முழுதும் நய வஞ்சக சொல் ,,,,,
இருக்கும் போது ஏற்கவில்லை இறந்தபின் கூறி என்னபயன்.....!
மாலை விழுகின்றனஎன் உடல் மேல் வருகிறாள் என் மனதை திருடியவள்,,, யார் என்று அனைவரும் நோக்க என்னை நெருங்கினாள் என்னவள் .......,!
உயிர் விட்ட இடம் தேடி செல்ல ஊர் பார்வை கிளர்ச்சியை தந்தன,
உயிர் இல்லா என்ன உடலை கண்ட அவள் ஒப்பாரி வைக்க வில்லையே .....!
உற்று என் உருவத்தை பார்க்கிறாள் ,ஒரு துளி கண்ணீர் அவள் கண்ணீன் ஓரம் .........,,
கூடி நின்ற குலமாதர் கேட்கிறார், குடி கெடுத்த கூடியவள் அழவில்லை என்று ....!
அழுகையை அடக்கிய என் உயிர் துடிக்கிதே , அடங்கிய என் உடலை கண்டு ....,!
சினம் கொண்ட என் தேவதை சிறகொடிந்து நிற்கிறாள் , சீறி பாய்ந்தன என் செவிகளில் அவள் அழுகையின் குரலோசை....!
கேள்விகளை தொடுகிறாள் கேட்டவர் வாய் உடைக்க ,கெஞ்சி அழுதாள் அவளை பிழை சொன்ன ஊர் முன்னே ..!
இடர்பாடு இல்லாமல் ஊர்வலமாய் என் சவம் சென்றதுவே .......உடன் கட்டை இருந்திருந்தால் என்னவோ என் உயிர் உடலோடு மடிந்திருக்கும்.......உன் இன்பத்தை பறித்தேனே பெண்ணே எனக்கு சொரக்கமும் கிடைக்காதே .........இப்படிக்கு தற்கொலை செய்தவன் ....!!!!!!!!!!!!!!!!