இச்சுவை தவிர யான்போய்

பூக்கள் சூடிய ஈரம்தானே
உன் குளிர்ந்த வெட்கம்
அதுவன்றோ வாசனையாகியது
நெகிழ்ந்த மௌனத்தில்
பிறந்த காதலை கூறியதும்.
காற்றின் ஆலாபனையில்
மேகங்கள் சிந்தச்சிந்த
நீயோ பேசியவண்ணம்...
காண்கிறாயா தோழி,
உயிரில் முடிச்சிட்ட துயரம்
உன் மந்திரப்பார்வையில்
அலைந்து ஆவியாதலை..
இன்னும் பேசுகிறாய்
வழியும் கண்ணீர் வழிய
வானம் திறந்தது உன்னுள்.
துடித்துப் பற்றுகிறது
உன் கரங்கள்தான்...
இனி இரவினில் மரிக்காது
காணும் கனவினில் கண்ட
வாழ்வின் மகரந்தங்கள்.

எழுதியவர் : ஸ்பரிசன் (5-Jul-18, 8:02 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 72

மேலே