265 புறங்கூறுவோனைப் புறத்தாக்கல் கோன் முறை – புறங்கூறல் 7

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

ஒருவ னொருவன் குறையையுரைத்
..திடவே யதனைக் கேட்டோர்கள்
பெருக பத்தங் கலந்துபல
..பேருக் குரைக்க விவ்வாறே
மருவி யெங்கும் பரவுதலான்
..மண்ணின் முன்னம் தூறுமவன்
குருநோ யொப்பா னவனைக்கோன்
..ஊர்விட் டகற்றல் நன்றேயாம். 7

– புறங்கூறல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை::

”ஒருவன் பிறன் குறையை கூறினால், அதைக் கேட்டோர்கள் பொருந்தாதன மிகவுங் கலந்து பலபேருக்குச் சொல்வார்கள். இவ்வாறாக மாறுபட்டுத் திரிந்து உலகெங்கும் அது பரவும்.

ஆதலின், இப்பூமியில் முதலில் புறங் கூறுபவன் தொத்துப் பிணியாம் அம்மை நோய்க்கு ஒப்பானவன். அவனை அரசன் (ஆட்சியாளன், நீதிமன்றம்) ஊரைவிட்டு அகற்றுதல் நன்மை பயக்கும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

பெருகு - மிகவும். அபத்தம் - பொருந்தாதன. தூறல் - புறங் கூறல்.
குரு - அம்மைநோய். கோன் - அரசன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jul-18, 8:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

மேலே