அவன் பார்வையில் அவள்
தினமும் உன்னை நான் பார்த்தேன்
நீ என்னைப் பார்த்தாயா தெரியாது
என்னை அறியாமல் உன் அழகில்
என் மனது லயித்து என் மனம்
உன்னை நாட , இரண்டில் ஒன்று
தெரிந்திடவேண்டும் என்று நினைத்தே
உனைப் பார்த்திட என் கண்கள் தேடிட
பெண்ணே , உன்னை அவனோடு...
என் கண்கள் கண்டுகொண்டதேனோ
புரிந்துகொண்டேன் இப்போது என் மடமையை
பார்வைகள் கனிந்தாலன்றி பாவை
கனிவதில்லை, பாவை கனியவில்லை என்றால்
காதல் கனிவதில்லையே.............
இன்றும் அவளை பார்த்தேன்
என் மனதில் அவள் இல்லை
அவள் அழகை ரசித்த கண்கள்
மனதில் ஏற்கமறுத்தது அவளை
அழகான சுற்று சூழ்நிலை கண்ணுக்கு
விருந்து, அழகான மங்கையும் அதுபோல,
அத்தோடு நின்றது எண்ண எழுச்சியும்
மனம் லேசானது நிஷ்களங்கமாய் .