கடவுள் ஏற்கும் பூ
![](https://eluthu.com/images/loading.gif)
ஆம்..!!
ரோஜா பூக்களை பிடிக்கும் என்று சொன்னேன்..!!
காகிதத்தில் செய்து வைத்தால் கூட பிடிக்கும் என்று நான் சொன்னதால்...
உயிருள்ள பூவிற்கும்
உயிரற்ற காகிதபூவிற்கும்
வித்தியாசம் கண்டுபிடிக்க தெரியாது என்று நினைத்துவிடாதீர்கள்..!!
காகித பூ எத்தனை அழகாக புன்னகைத்து என்னை மகிழ்வித்தாலும் அது வெறும் காகிதம் தான்..!!
அதில் போலித்தனம் உள்ளது..!!
காகிதம் இன்று பூவாக இருந்தது எனில்..!!!!
நாளை பாம்பாக கூட மாறும் தன்மை கொண்டது என்று நான் நன்கு அறிவேன்..!!!
உயிருள்ள பூவின் குணம் மாறாதது..!!
உயிருள்ள பூவில் கசடுகள் இருக்காது..!!
உயிருள்ள பூ வாடினாலும் உரமாகுமே தவிர ஒருகாலும் விஷமாகாது..!!
உயிருள்ள பூவில் உண்மை இருக்குமே தவிர துரோகம் என்ற விஷப்பால் இருக்காது..!!
உயிருள்ள பூவில் கோபம் எனும் சிறு முட்கள் இருப்பினும் முள்ளில்லையேல் பூவிற்கு ஏது அழகு..???
முள்ளான கோபத்தை மட்டுமே பார்த்து
மலரின் மணமான(fragrance) பாசத்தை அறியாத மூடனா நான்.??
எக்குறை இருப்பினும் அதை நேசிப்பது என் குணம்..!!
அன்பை மட்டும் தருகிறேன்..!!
அடிமையாகமாட்டேன்..!!
பிடித்ததில் (loving things) உள்ள குறை (imperfections)
தடித்ததாயினும்(inspire of so many imperfections I still love) அது
வடித்ததாய்(negligible) தான் தெரியும்..!!
என்னதான் கடவுளுக்கே காகித பூ பிடிக்கும் என்று கொண்டாலும்
பொய் என்றுமே கடவுளருகே செல்லாத மாயம் நீ அறியாயோ..???
பொய்யான காகித பூவிற்கு அகமே இல்லை..!!
பிறகு தானே அகத்தின் அழகு
என்றெல்லாம் பேச..!..??
தமிழில் ஒப்பிலக்கணம் உள்ளது போல் ஆங்கிலத்தில் degrees of comparison என்ற இலக்கணம் ஒன்று உள்ளது..!!!
அது இரண்டு உயிருள்ள/உயிரற்ற பொருட்களை ஒப்பிடுவது..!!
அதில் கூட ஒப்பிடதகுந்த பொருட்களையே பயன்படுத்துவர்..!!
உயர்ந்த தாழ்ந்த பொருட்களை ஒப்பிடுவது தவறு என்பர்..!!
அதுபோல் நினைவிலும் ஒப்பிட தகாத இரு வேறுதுருவங்களை ஒப்பிட்டதாய் நினைத்து என்ன வருத்தம்..!..??
தன் வாசனை பூ அறியாது என்பர்..!!!
உன் வாசம்-பாசம் நான் அறிவேன்..!!
நீ உணரம்மா..!!
(இங்கு வாசம் என்ற சொல் மரியாதை/தகுதி என்ற பொருளில்.. காகித பூவிற்கு வாசம் இல்லை எனவே நீ காகித பூ இல்லை என்ற பொருளில்)
கடவுள் ஏற்றுக்கொள்வதும் உயிருள்ள பூவைத்தான்...!!
ஆம்.. நீ உயிருள்ள பூ தான்..!! :-)