திண்ணமில்லா எண்ணங்கள்

தேடிக் கொண்டு இருக்கையில் கிடைக்காத சில காட்சிகள்..💚💚💚💚எதையுமே நினைக்காமல்
நேரம் பார்த்ததும்
நேரம் கடந்துவிட்டது
இனி யாரையும் பார்க்க வாய்ப்பில்லை..
இல்லறம் சென்று தேநீர் தயாரிப்பில் ஆழ்ந்திருப்பார்கள் என்ற
நினைப்பின் நொடியில்..
ஏதோவோர் வாகனம் வாகன நெரிசலால் அருகே வர..
யாரடா அது என ஓட்டுநரை முறைத்தபடி உள்ளே பார்த்தேன்..!! 😍😍😍😍😍😍😍😍😍😍
கண்களின் காட்சியை நம்புவதற்கு நான்கு வினாடி ஆனது..!!❤ நான்கு வினாடி காட்சியின் கண்களையே கண்டவண்ணம்..!!
காலையில் தான் நினைத்தேன்..!!
கடமையென வந்துவிட்டால்
காலம் போகும் வேகம் தெரியாதே..!!
அம்மா என்று அழைத்தவளை
அரைகணமேனும் பார்த்துவிட்டு வரவேண்டும் என..?!
என்ன மனுஷி இவள்..!!
நினைத்த கணம்
நினைவின் கயிற்றை
பிடித்தபடி முன் தோன்றுகிறாள்..!!💚💚
நகரும் வாகனத்தால்
நகர்ந்த காட்சி
நறுக்கென்று கொட்டியது
நான் தான் என்று
நவின்றபடி..!! (நகைப்புடன் சொன்னபடி)
நிதானத்திற்கு வந்து
விழி சிறையில்
விழுந்த என்னை நானே
விடுவித்துக் கொண்டு
விழித்து கொண்டு
வணங்கினேன்..!!
பதில் படபடப்பின்றி
புன்னகையுடன்💚💚 பாய்ந்தது எனக்குள்..!!
தலைக்குனிந்து
சற்று சிரித்தேன்
சிறியதாய்..!!
சிரித்ததும் பிரித்துவிட்டார்
வாகனங்களை..!!

மந்திராலயம் அடைந்தால்
மன அமைதி கிடைப்பது
என் நியதி..!!
ஏனோ அன்று
கோவில் சென்றும்
மொத்த சித்தமும்
சத்தமிட்டதே ஒழிய
சாந்தமாகவில்லை..!!

சாய்ராம் புரிந்துக்கொண்டார்..!!
பக்தியில்லை..
பாசச்சிக்கலில்
பற்றிக்கொண்டதால்
புத்தனைக்கண்டும்
புத்தி நிலையாய் நிற்கவில்லை என..!!

புத்தி தெளியும் வரை
நில் என் ஆரத்திக்கு என எனக்கு முன்வரை
நகர்த்திவிட்டு என்னை நிறுத்திவிட்டார்..!!

நின்றேன்
பச்சை பாவலன்
இச்சை கொள்ள வைத்தார்..!!
கடந்த வாரங்களில்
கண்களை களிக்க வைத்து
சித்தத்தை தெளிய வைத்த பித்தன்..!!
இனிவரும் நாட்களில்
வாராவாரம் வந்து
விழிக்கண்டு வணங்க இயலாதே என்று அழுதேன்..!!

பொறுப்பினை ஏற்று
இயல்பு வாழ்க்கையை(routine life)
ஏற்க போகிறேன்..!!
இனி என்று கிட்டுமோ
பிரிதொரு பாக்கியம்
என பார்த்தபடி..!!
பிடித்தவர்கள் அனைவரின்
மனமெய்(மனம்,மெய்-உடல்)
நலமும்
வளமும் திகழ பிரார்த்தித்தபடி..!!!

முற்றுப்புள்ளி வைக்க நான் நினைத்ததில்லை..!!
முழு மனதாய் நேசித்த ஒன்றை எங்ஙனம்
முற்றுப் புள்ளி வைக்க..??

அங்கிருந்து புறப்பட மனமில்லை..!!
அங்கிருந்து நகர்ந்தால்
பாசம் சிக்கல் தொடருமே என்ற பயம்..!!

எத்தனை நேரம் அங்கிருக்க..?!!
பெற்றவரிடமிருந்து அழைப்பு..!!
வந்துவிட்டேன்
வீட்டிற்கு சுமைதாங்க...!!!
இன்னும்
சுமை என்ற சுற்றிற்குள்
நீ செல்லவில்லை என
நினைக்கிறீர்களா..???
என்னவள் அளவிற்கு சுமை இல்லை..!!
எனினும் சுமை இல்லாமலும் இல்லை..!!

பார்த்தீர்களா
பாசச்சிக்கலில்
மாட்டிக்கொண்டேன்..!!

இந்த கடலிலிருந்து
கரையை அடையவே
பக்தி என்ற படகை
பிடித்தபடி நகரக்கிறேன்..?!!

எழுதியவர் : பகவதி லட்சுமி (8-Jul-18, 9:50 am)
சேர்த்தது : பகவதி லட்சுமி
பார்வை : 172

மேலே