சுவாமிநாதனும் நானும்
சுவாமிநாதன் வருகை..!!
என் மாணவன்..!!
இல்லை எனக்கும் மாணவன்..!!
சரியா..? :-)
நாள் : 29.6.18
முந்தைய நாள் மாலை
வீடு திரும்புகையில் பதங்கமாதல் (sublimation) வினைக்கு எடுத்துக்காட்டு (example) கேட்கிறார் கல்லூரியில்..!!
சோதனை (experiment) முறையில் வேண்டுமாம்.!!
முன்பு சொன்ன
அறிவியல்
இணையதளம் சொல்லுங்கள் என்றான்..!!
நாளை வா பதங்கமாதல் சோதனைகள் அனைத்தும் சேகரித்து சொல்கிறேன் என்றேன்..!!!
மறு நாள் வந்தான்..!!
இடையில் என் தம்பி.!!வேடிக்கையாக..
அவர் கையில் கற்பூரம் பற்றவைத்து சோதனை நிருபிக்கப்பட்டது என்று முடித்துவிடு என்றான்..!!
எனக்கும் அவனுக்கும் ஒரே ஆசிரியர்கள் வேதியியல் மற்றும் இயற்பியலுக்கு..!!
நாதன் நாங்கள் பள்ளியில்
வேதியியல் வகுப்பில் இப்படித்தான் சிரித்துக் கொண்டோம் என பள்ளி நினைவுகளை உதிர்த்தான்..!!!
அப்போது அவன் வகுப்பாசிரியை (physics)
முகத்துக்கு நேராக புகழ்வது பிடிக்கும்..!!
முகத்துக்கு பின் என்ன பேசினாலும் கவலையில்லை என்று புகழ்ந்து கொட்டினான்..!
அவன் தந்தை முன்னும்
அவன் நண்பர்கள் முன்னும் அவனது வேதியியல் ஆசிரியை ஏதோ சொல்லி காயப்பட்டதாக சொன்னான்..!!!
கண்களில் நீர் ததும்ப..!
இன்னும் காலதாமதித்தால் கண்ணீர் விழுந்துவிடும்..!!
பாராட்டியவரை நினைத்துக் கொள்ளடா..?? வீண்பேச்சு எதற்கு
என்று பேச்சை திசை திருப்பினேன்...
நாம்தான் ஊருக்கு உபதேசிப்பதில் வல்லவர் ஆயிற்றே..!!
பேச்சை மாற்றுவதற்கு..
கல்லாரியில்
மொழிப்பாடங்கள்
இல்லையென வருந்துகிறாயே என்றேன்..!!!
என் தமிழ்புராணம் பற்றி கேட்டேன்..!!
ஆம் என்றும் கணிதம் கடினமாக உள்ளது என்றும் அலுத்துக்கொண்டு
பத்து நிமிடத்தில் படித்து முடிக்க சிறயதாய் தமிழ் கதைகள் இருக்கா என்றான்..!!!
ஏன் இல்லை என "ஆயிசா" புத்தகத்தை காட்டி தேர்வு முடிந்ததும் வந்து வாங்கிக்கொள் என்றேன்..!!!
பதங்கமாதல் சோதனைகள் அனைத்தும் சேகரித்து சொன்னேன் அவன் சென்றுவிட்டான்.!!
பதங்கமாதல் :
கடந்தகாலம் அழைத்தது..!!
நேரம் 8.40AM..
அன்று வகுப்பறையில் அவர்களது தலைப்பு பதங்கமாதல்..!!
பாடம் நடத்துகையில்
புரிவதற்கு தமிழில் குறிப்பெடுக்கும் பழக்கம் எனக்குண்டு..!!
அன்றும் குறிப்பெடுத்தேன்..!! இன்றும் பதங்கமாதல் சொல்லுக்கு ஆங்கில பெயர் கேட்டால் யோசிப்பேன்..!!
Change of Solid state directly to gaseous state without attaining liquid state என்றார்..!!
பதங்கமாதல் என்று எழுதினேன்..!! வார்த்தையை ரசித்தபடி..!! சிறிய புன்னகையுடன்..!! ஏனோ அந்த புன்னகைத்தான் பெரும் பிரளயமானது..!!
இரண்டாம் வரிசையில் ஓரத்தில் அவருக்கு எதிராக அமர்வதால் நான் என்ன எழுதினாலும் எளிதாக படிக்க முடியும்..!!
ஏதோ எழுதுகிறேன் என்று உணர முடியும்..!!
சட்டென நிறுத்தி என் புத்தகத்தை கையிலெடுத்து சுவரில் வீசி.. what are you doing there.? Am teaching here and you are writing something..? என்று ஆவேசத்துடன் கத்தினார்.!!
I took notes only என்றேன்..!!
மீண்டும் திட்டினார்..!!
எழுந்தவள் அமராமல் அதையே சொன்னேன்..!!
Shut up and sit down.. you should not attend my class after the prayer.. என்றார்..!! மீண்டும் அதையே சொன்னேன்..!!
shut up and sit down or get out now itself.. என்றார்..!!
வாய்மூடி அமர்ந்தேன்..!!!
என்ன செய்தேன்..? எதற்கு திட்டினார் என ஒன்றும் விளங்கவில்லை..!!
மறுபடியும் வகுப்பிற்கு வரும்வரை வழிமுழுதும் அழுதேன்..!!
எல்லோரும் உள்ளே சென்றனர்..!!
நான் வெளியிலேயே நின்றுவிட்டேன்..!!
வந்தார்..!! பார்த்தார்..!!
Get inside.. என்றார் "என் கைபிடித்து".!!
மீண்டும் really I took notes only என்று உள்வர மறுத்து விளக்கினேன்..!!
It's ok come என்றார்..!!
உள்சென்று அமர்ந்தேன்..!!
அவரை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை..!!
அழுகையும் ஆர்ப்பரிக்கிறது..!!
அன்று முழுதும் அழுதவண்ணம் இருந்தேன்..!!
இயற்பியல் ஆசிரியை பல்வலி என விடுப்பு எடுத்திருந்தார்..!!
அன்று அருகே அவரும் இல்லை..!!
மதியம் உணவுக்கு பின் பக்கத்து வகுப்பில் இருந்தார்.!!
காலையில் என்னை கடிந்தவர்..!!
எனை எட்டி பார்த்ததை நான் பார்த்தேன்..!!
அவர் மனம் அதுதான்..!!
திட்டிவிட்டு பின் வருந்துவார்..!!
அடுத்தநாள் இயற்பியலுடன்
இனிதாய்
கடந்தது
காலம்..!! :-)