நீலநயணங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது.....( tamil novel ) chapter 01

chapter 1:

மாலை மகள் தன் இயல்பான பகல் பொழுதுகள் கரைந்த பின் குளிர் இரவின்மடி எண்ணி நேரம் கடத்த அங்கே யாரிவன் தன் கடல் தோழி கரைமடியில் குளிக்க வருகிறான். இது வரை நிழல் காணத தன் மேனியில் திடீா் சிவப்பு. பொன்னென்ற அவன் மேனி அழகில் தன்னை மறந்த தன் மாறாப்பு மேகங்கள் நழுவி செல்ல தான் மறைத்து வைத்த வைரங்கள் நட்சத்திரங்களாக சிதற ஓடிப்போனாளே.

இதுவரை ஓய்யாத பேச்சும் ஓடிய விளையாட்டையும் விட்டு அலைமகள் சற்று அவன் தன் கரை வந்து சாய்ந்துபடுப்பதை கண்டாள். துள்ளி ஓடி சென்று அவன் பாதம் நெருங்க நாணம் பதைக்க தவழ்ந்து பின்வாங்கினாள். தன் வலை தேடி துறத்திய அலை இப்போது சலனமின்றி இந்த ஆண்மகனின் பாதத்தில் கொஞ்சுவதை நகைப்புடன் கண்கள் நீட்டி எட்டிப்பார்த்தது  சிறு நண்டு.

கடல் நீரில் மிறுதுவான தலை முடி ஈரம் சொட்ட இடம்மாறிய போதும் புது அழகாக நின்றதைக்கண்ட நண்டிற்க்கும் புது ஆவல் மேல்லோங்க சத்தமின்றி அவன் அருகே தலை முடி தொடும் ஆசையில் சென்றது. நண்டின் எட்டுக்கால் நடனம் புரியாமல் அவன் தலை உயர்த்திப்பார்க்க நிரைவேராத ஆசையோடு தன் வலை சென்று மறைந்தது.

மின்னும் தன் அழகில் வையம் எல்லாம் தற்பெருமையில் சுட்டெரித்தாளே சூரியமகள் , ஏனடி உன் மெல்லிய பொன்னாடையை களற்றி கடல் மகளுக்கு அணிவித்தாய்?அவன் தன் மேனிஅழகை பாா்க்க, அவள் தன் கண்கள் கூச முகம் மறைத்து வானம் விட்டு விடைபெற்றாள். கடல் நீர் துளிகள் கட்டுடல் எங்கும் வழிய பொங்கும் தன் தாபம் அடங்கி சூடு தனிந்து குளிரானது கடல்.

தாங்காத சந்தோசத்தில் திணறிய கடற்கரைமண் அவன் மேனியில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஒட்ட போட்டி போட்டது. பின் அலை வந்து அள்ளி செல்ல சரிந்து கடலுல் மறைந்தது. கடற்காற்றும் அவன் இளமை கண்டு காதல் கொண்டது. தன் பெண்மையின் சுகம் தர மென்மையான தன் குளிா் கரங்கள் கொண்டு வருடி அவனை கிறங்கடித்தது. 

தென்னை மரங்களும் அவன் உதடு கடித்து கிறங்ககிட கண்டு, தன் இளங்காய்கள் கள்ளுரும் நிணைவில் விரிந்த தன் பாலைகளை சாய்த்து விசிறியாய் தன் சின்ன மஞ்சள் குவிந்த பூக்கள் வாய் திறக்க தேன் சொறிகிறது. இவனிடம் தன் காதல் சொல்லாமல் ஏங்கி தன் முழுமதி தேய்ந்து பிரை ஆனாலும் இந்த இனிய இரவெல்லாம் ஓரக்கண்ணால் அவனை கண்டு மகிழ உதயமானது நிலா.

தனியே நிலவின் கள்ள உள்ளம் தெரிந்த இந்த குரும்பு வின்மீன்கள் வான் முழுவதும் மெல்ல தோன்றின. அவனிடம் தன் மின்னும் அங்கம் காட்டி ஆசை தீற கண்ணடித்தன. எங்கோ பூத்த மாம்பூ ஒன்று வாடைகாற்றால் தன் சிறிய வெள்ளை மேனி அலைய கரையோரம் கண்கள் மூடி சயனம் கொண்ட இந்த இளையவன் மீது தஞ்சமானது. தன் மீது விழும் பூவை எடுத்து அதன் இதழ்களில் அவன் இதழ் சேர்த்து முத்தமிட தன் பூமேனியில் பூவையின் சாரம் தாளாமல் மடியில் தேன் சுறக்க மயக்கம் கொண்டது.

ஏதோ ஒரு புது வித அனுபவம் தேடியே கரையோரம் அவன் வந்திருந்தான். பல காலம் ஆயிற்று இப்படி ஒர் அழகையும்  அமைதியையும் ஒன்றாய் அனுபவித்து.  இந்த மாலை மங்கும் ஜாமத்தில் கருநீல சேலையில் வளைய வளைய வெள்ளையில் பூவேலை கொண்ட ஓரங்கள், கடலும் அதன் காற்றில் வென்னுரை பொங்கும் அலையும் , தங்கமென தகத்த பூமிமகளின் கரைமேனியை தழுவிதழுவி வரும் அழகை பார்த்து மெய்மறந்தான்.

to read next chapters visit tamilnovelofsrikavi.blogspot.in

எழுதியவர் : sri (8-Jul-18, 2:31 pm)
சேர்த்தது : srikavi 110
பார்வை : 123

மேலே