கண்மணியின் கதை
கண்மணியின் கதை..!!
அவளது முன் பத்தாண்டுகள் அவள் கடந்தது தமிழ்வழி(medium of instruction-tamil) கல்வி என்பதால் தமிழுக்கு கிரீடம் தந்து தலையில்வைத்து கொண்டாடுவாள்..!!
தமிழென்றால்
மூன்று மைல் பின்னோடும்
மாணாக்கர்கள் மத்தியில்
முப்பது மைல் முன்வந்து அமர்வாள்.!!
தமிழ்,கணிதம் தவிர
மற்ற வகுப்புகளில்
"வேற்றுகிரக(aliens) வாசிகளின் வாயசைவை பார்ப்பதும் கேட்பதுவுமாய் விளங்காது விழித்து விக்கித்து கிடப்பாள்...!!!
முதல் வாரம் பள்ளிசெல்லமாட்டேன் என அழுதாள்..!!
மூன்றாம் வாரம்
என் முன் பள்ளியில் முதல்மாணவி நான்..!!
என் வாழ்க்கையை அழித்துவிட்டீர்கள் என கதறினாள்..!!
மூன்றாம் மாதத்தொடக்கம்
முதல் செய்யுள் ஒப்புவித்தல்..!!(Tamil aural oral)
தமிழ் தானே என்று எண்ணாது
தமிழ் தேனே என்று
எண்ணி
முதல் மாணவியாய் தடையின்றி
முதல் வாய்ப்பில் முடித்துவிட்டு
மூத்தோர் (elders) பாராட்டும்
மற்றோர் கைத்தட்டலும்
காதுக்கு இனிக்க
மூவுலகும் வென்றதுபோல் வீரநடையுடன் முதலில்
வெளிவந்தாள்..!!
இப்பள்ளி வந்தபின் அவள் சுவாசித்த முதல் பாராட்டு தென்றல் அதுதான்..!!!
வீடுசெல்ல படியிறங்குகையில் பதிவுகுறிப்பை(record note) எடுத்துக் கொள்ள சொல்லி வகுப்பாசிரியர் மதியம் சொன்னது நினைவுக்கு வந்தது..!!
காட்சி 1 :
வேதியியல் ஆய்வுக்கூடத்தில் (chemistry lab)
பதிவுகுறிப்பு(record note) எடுக்க சென்றாள்..
அவளின் தோழி
வகுப்பறையில்
அனைத்தையும்
வைத்துவிட்டாள்
என்றறியாமல்..!!
மாணவி(மா) : Excuse me
ஆசிரியை(ஆ) : Yes.. come in..
மா : Record note எடுத்துக்கௌள்ளவா.?
ஆ : Can't you speak in English.? Don't you feel ashamed.?
மா : Sorry.. record note..
ஆ : What record note.? Everything I have sent to classroom know..
மா : ok sorry thank you.
ஆ : what sorry..? Go..
காட்சி முடிவில்
கானகம் செல்கையில்
கண்களில் வெள்ளம்..!!
பாராட்டின் தென்றல் பருகுவதற்குள் அவளின் துக்கம் தொண்டையை அடைத்தது..!!
கடவுளுக்கு நன்றி
கண்ணீருக்கு நிறம்
கொடுக்காததற்கு..!!
(My favourite lines : Thank God tears are colorless..!! Otherwise pillows would have had revealed many secrets)
இரவு தலையனையிடம்
அத்தனை அழுகையையும் கொட்டிக் தீர்ந்துவிட்டது
புதிதாய் வருவதுபோல்
பள்ளியில் நுழைந்தாள்..!!
அவளுக்காய் காத்து நிறபதுபோல் நிற்கும் ராமரிடம்
"இனி அவர்களிடம் பேசும் சந்தர்ப்பம் வந்தால் காப்பாற்றி விடுபா" என்ற வேண்டுதலுடன் வகுப்பில் நுழைந்தாள்..!!
காட்சி 2 :
மணி 8.40AM ஆனது..
வந்துவிட்டார்..!!
அந்நிமிடம் தலைக்குனிந்தவள்
நிமிரவே இல்லை..!!
புத்தகம் புதிரை போல்
புலனானது..!!
இவர்களுக்கு விடுமுறை எல்லாம் தேவைப்படாதோ நேரம் தவறாது வந்துவிட்டார்களே என முனுத்தபடி தானாய் பேசி சிறியதாய் சிரித்துக் கொண்டாள்..!!
தலை குனிந்தவள் நிமிரவே இல்லை..!!
வருகை பதிவு செய்கையில் (while taking attendance)
அவளுக்கு முன் உள்ள பெயர் வரை வேகமாய் அழைத்த ஆசிரியை
அரைநொடி மௌனம் காத்தார்..!!
என்ன ஆயிற்று தன் பெயர் அழைக்கவில்லையே என கண்களை மட்டும் சற்று உயர்த்தி பார்த்தாள்..!!
அவளை பார்த்து கொண்டிருந்த ஆசிரியை..
அவள் கண்ணையே பார்த்தவண்ணம்
எல்லோர்முன்னும் கூறினார் :
I don't know why that girl don't know to speak not even a single word in English
எல்லோர் பார்வையும் அவள்பக்கம் பார்த்தது..!!
எதுவும் பேசாமல் மீண்டும் புத்தகம் புரட்டினாள்..!!
"ராமா காப்பாற்று என்றேன் தூற்றச்செய்துவிட்டீரே என எண்ண ஓட்டம்"
கண்களில் வெள்ளம்..!!
மணி அடித்து அனைவர் கவனத்தையும்(for prayer) திசைதிருப்பியது..!!
அழுகையை அடக்கும்
ஆயுதம் தண்ணீர்..!!
அவள் அம்மா சொன்ன நியாபகம்..!!
தண்ணீர் குடித்து அழுகையை விழுங்கிக் கொண்டு நடந்தாள் நடைபிணமாய்..!! (For prayer with everyone)
அன்று முழுவதும் பள்ளியிலும் வீட்டிலும்
அவளாய் யாரிடமும் பேசவில்லை..!!
நீண்ட யோசனைக்குப் பின் வேறுபள்ளி மாறிவிடவா என அவள் வீட்டில் வினவ வீண் வார்த்தைகளால் மேலும் வெந்து போனாள்..!!!
அன்றிலிருந்து அவர்கள் வகுப்பு என்றாலே அத்தனை பயம்..!!!
மீண்டும் எல்லோர் முன்னும் ஏதேனும் திட்டிவிடுவார்கள் என்று எண்ணி மறையத் தொடங்கினாள்..!!
புத்தகம் பார்த்தால் புரிந்ததுவும் மறந்துவிடுவது போன்ற பதற்றம்..!!!
இதனிடையே இயற்பியலில்
நன்மதிப்பெண் பெற்றதற்கு பலர் முன் பாராட்டினார் மற்றொருவர்..!!
அதுவேறு கதை..!!
தொடர் கதை- தொடரும் கதை..!! :-)
இதை பார்ப்போம்..!!
இடையில்(in the process.. once.. After 67 days) வகுப்பின் முதல் மாணவர் காலதாமதமாக வந்ததால் அவனை வெளியில் நிற்கச் செய்தார் அவள் வகுப்பாசிரியை..!!
உண்மையாய் அவனுக்கு கொடுத்த தண்டனையில் மனம் மகிழ்ந்து அவர் முகம் பார்த்தாள்..!!
பல நாட்களுக்கு பின் அன்றுதான் கண் பார்த்தாள்..!!! பாகுபாடின்றி இருக்கிறார் (impartial)
என்ற பெருமையுடன்..!!
கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமும் இருக்கும் போலும் என்று அவளை அவளே தேற்றிக் கொண்டாள்.!!
அவர் சொன்ன வார்த்தைகள் மறக்கவில்லை..!!
அவரை பிடித்துப்போனதால் அவற்றை புதைத்துவிட்டாள் மனதின் ஓர் மூலையில்..!!
கொஞ்ச காலம்
ராஜ வாழ்க்கை..!!
பிடித்தவர்கள் அனைவரும் கண்முன்..!!
எந்த மூலையில் இருந்தாலும் அவள் விழிச்சிறையில் இருந்து தப்பமுடியாது..!!
இதனிடையே சந்தீப் என்ற மாணவனுக்கு தமிழ் தெரியாது..!! வடமாநில மாணவன்..!!
அவளின் வகுப்பாசிரியை அவனை ஆங்கிலத்தில் ஏதோ கேட்க அவன் முழிக்க வடமொழியில் குறைந்தது ஐந்து நிமிடங்கள் உரையாடினார்கள்..!!
இவருக்கு தமிழ் படிக்க எழுத தெரியாது என்று அன்றுதான் அவளுக்கு தெரியும்..!!!
இருப்பினும் தமிழில் பேசினால் மட்டும் சீறுகிறார்..!!
தன் மொழியெனில் சிரிக்கிறார்..!!
தவறு என் மீதா.? தமிழ் மீதா.? என்ற ஆழ்ந்த யோசனையில் அவள் இருக்கையில்..
மணி அடித்தது..
அடுத்த வகுப்பு இயற்பியல்.. :-)
மேலும் தகவல் வேண்டுமா என்ன..!! ;-)
காலம் களிப்புடன் கடந்தது..!!
அன்று வகுப்பாசிரியை விடுமுறை..!!
என்ன ஆயிற்று என்று எண்ணியபடியே..!!
அடுத்த நாள் கால்களில் கட்டுடன் மெதுவாக வகுப்பில் நுழைந்தார்..!!
என்னவாயிற்று என்று எல்லோரும் வினவினர் படியிறங்குகையில் தடுக்கிவிட்டது என்றார்..!!!
மறுநாள் கணிணி ஆய்வுக்கூடத்தில் புத்தகம் எடுக்க அவள் தோழியுடன் செல்கையில் உள் இருந்தார்..!!
வணங்கிவிட்டு வலி சரியாயிற்றா என்றாள்..!!
அவர்கள் பதில்..
Ya better.. how many times do you want me to repeat the same..?? Can't you speak in English.? This is English medium school and you have to speak only in English..
கடவுள் போல் கணிணி ஆசிரியை வந்து நலமா என்றார்..??
அவள் கவலை அவர்கள் வலிபற்றி..!!
அவர்கள் கவலை அவளின் மொழி பற்றி..!!
மொழியில்லாவிடினும் என் மொழியில் எக்குறைவும் இல்லை என நினைத்து கொண்டு..!!
தோழியிடம் மருத்துவமனை சென்றார்களா என்று கேள் என்றாள்..!!
பதில் கிடைத்தும் அரைமனதாய் வந்தாள்..!!
தன் மொழியில் பேசும்போது தெரியவில்லையா இது ஆங்கில பள்ளி என்று..!!
அது எப்படி
அக்கறையைக் கூட புரிந்து கொள்ளாத ஒரு மொழிப்பற்று..???
என்ற கோபம் இவளுக்கு..!!
தாய் எட்டடி பாய்ந்தால்..
குட்டி பதினாறு அடிபாயும் தானே..??
மூன்று முறை
முட்டிப் பார்த்துதான்
முடிவெடுத்தாள்..!!!
இனி அவர்கள் தமிழில் பேசினால் மட்டுமே உரையாடல்..!!!
இல்லையேல் புன்னகையோடு கடந்துவிடுவோம் என்று முடிவெடுத்தாள்..!!!
பள்ளியின் கடைசி நாள்..!!
தேர்வு தொடங்கும் முன்..!!
எல்லோரிடமும் பிரியாவிடை சொல்ல சென்றாள்..!!
இவர்களை கண்டதும்
அவள் கண்ணீர்தான் பேசியது..!!
கடைசிவரை தமிழில்
பேசவும் மறுக்கிறார்..
பேசினாலும் வெறுக்கிறார் என்று..!!!
அவள் புத்தரின் பெண் அல்ல..!!
அவளுக்கும் கோபம், பாசம் என எல்லாம் இருக்கிறது..!!