அன்பு இராட்சஷி
அன்பை உணரமுடியாதவன் பெண்ணை புரிந்து கொள்வது கடினம்... 
தாயின் அன்பை மூச்சு முட்ட பேசி அலைபவர்களில் நானும் ஒருவன்... 
மனைவியின் காதலுக்கு அடிபணிந்த கூட்டத்தில் நானும் இருக்கிறேன்... 
சகோதரியின் பாசத்தை வார்த்தைகளில் சொல்ல முடியாமல் திகைத்துப்போன சகோதர இனம் நான்... 
மகள் மூலமாக தன் அன்னையை கண்டு கொண்டாடுபவர்களில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்... 
பெண்ணை புரிந்து கொள்ள மறுத்து வாழ்வும் வீடும் நாடும் தோற்கும் வரலாறு மாறவே ஆசைப்படுகிறேன்...
 
                    

 
                                