உனக்குள் தெரியும்
நினைத்தது நடக்கும் வரை
அறிவே பெரிதாகத் தெரியும்
நினைத்தது நடக்காதது வரை
நம்பிக்கையே பெரிதாகத் தெரியும்
எதிர்பாராதது நடந்து விட்டால்
தெய்வம் பெரிதாகத் தெரியும்
எதிர்பார்த்தது இடரப்பட்டால் ஞானம் பெரிதாகத் தெரியும்
பெரிதாகத் தெரிந்தது எல்லாமே சிறிதாகத் தெரியும் போது
உன்னை உனக்குத் தெரியும்
உன்னை உனக்குத் தெரியும் போது
கடவுள் உனக்குள் தெரியும்!