சொல்லாட்சி - சொல்லியாச்சி

இரவெல்லாம் சூரியன்.!
பகலெல்லாம் அமாவாசை..!
வழியெல்லாம் எரிமலை
வார்த்துவிட்ட தீமழை..!

ஊனமாய் மௌனமாய்...
மொழியெல்லாம் வாய்வழியே..

காட்டாற்று வெள்ளத்திலே..
கண்ணாடி கப்பலாகி...
கண்டதெல்லாம் காமாலை..
சொன்னதெல்லாம் பாமாலை..!

குண்டுகுழி ரோடுகளை..
லண்டனாக்கிக் காட்டுவோம்...
செண்டுமழை செவியினிலே..
கொண்டுவந்தார் ஆட்சிக்காக...!

எழுதியவர் : உமர்ஷெரிப் (8-Jul-18, 5:59 pm)
பார்வை : 501

மேலே