நகுலனின் பிராந்தி புட்டியில் அமர்ந்த ஈ சொன்ன செய்தி என்னவென்றால்
அதிக தூரம்தான் எனினும்
ஓடிப்போனால்
பிடித்து விடலாம் எனினும்,
நடக்கவே முடிகிறது.
மனதிலோ பயம்...எனினும்
தவழ்வோமென கருதினாலும்
தூரம் வியந்தேன்...எனினும்
பயணம் அருகியது.
சேருமிடம் வருகிறது
என்பது தெரிகிறது எனினும்
வழியெல்லாம் காண்பதோ
இரவுதான் பகல் எனினும்
பகலேதான் இரவு என்பதில்
கசக்கத்தான் செய்தது
அந்தப்பயணம் எனினும்
பயணம் தொடர்ந்தது.
ஊர் தெரியாது எனினும்
அந்த ஊர் பெயர் கூட
யாருக்கும் தெரியாது. எனினும்
கால்கள் வழுக்கின
பாதையில் துரிதமாய் எனினும்...
நில்லாது நீண்டது
பயணம் தன்னந்தனியே எனினும்..
கூட்டமாக இருந்தும்
அவரவர் அவரவராகவே எனினும்
சுட்டும் குளிர்ந்தும்
சிரித்தும் அழுதும்
பயணமானேன் எனினும்
ஒருவழியாய் ஊருக்கு
வந்துவிட்டேன் எனினும்
வந்த பின்புதான்
என்னை காணவில்லை.