என்னவளின் கண்கள்
விடை தெரியாத கேள்விக்கும்
விடை கொடுக்கும் அவளின் கண்கள்!
அந்த கண்களில் இருப்பது
கருவிழி அல்ல
காரிருள் நிலா!!
மழையும் வெயிலும் ஒரே நேரத்தில் வரும்போது வானவில் தோன்றும்
அது பொய்யாக மாறிவிட்டது
என்னவளின் கண்இமைகளைப் பார்த்து!!
துப்பாக்கியில் எழுந்த தோட்டாக்கள்
என் உடலைத் துளைக்க வில்லை-ஆனால்
அவளின் கண் அசைவில் எழுந்த தோட்டா துளைத்து
என் உடலை அல்ல
என் மனதை!!
அவளின் கண் அழகில் மயங்கியதோர் எவரும் இல்லை
மடையன், நானும் மயங்கினேன்
ஏன்?
அவளைப் படைத்த
பிரம்மனை மயங்குவான்
பூமிக்கு வந்தால்!!