நிலவு,,நான்அவள்

என்னவளை பற்றி எண்ணும்போதெல்லாம்
நிலவே நீ என் கற்பனைக்குள் புகுந்துவிடுகிறாய்,
பின் நான் காணும் காட்சியில் எல்லாம்
அவள் நிலவாய்த் தெரிகின்றாள்; முழு நிலவாய்
அவள் வட்டமுகம் காட்சி தர, பிறையாய் தெரிகிறதே
பொட்டு இட்ட அவள் குறுநுதல் .............நான் இப்படி
உன் நினைவிலே ஐக்கியமென்றால், என்னவளோ
என்னையே நிலவாய்க் காண்கின்றாளாம் நான்
தொட்டால் மட்டுமே அலர்ந்திடும் அல்லிப்பூவாம் அவள்
நானோ அவளைக் காணாத போதெல்லாம் உன்னோடு
பேசி உன்னில் எனக்காக அவளிடம் தூது செல்ல
தூதுவனாயும் காண்கின்றேன் .............இப்படித்தான்
நிலவே, நீயும், நானும், அவளும் என் கற்பனையில்
உன்னை வைத்தே மண்ணிற்கும் விண்ணிற்கும் ஓர்
பாலமாய் அமைத்திட தூண்டுகிறாய்..........
நிலவிலா வானம் அந்த ஒரு நாள் காதலர் மனதை
பித்தாக்கிவிடுகிறதே ...............இதை நீ அறியாயோ
நிலவே ........
இதை இந்த இரவு முழுநிலவாய் பௌர்ணமி இன்று
உன் வரவிற்கு காத்திருக்கிறேன் இங்கே நான்
எனக்கு தெரியும் என்னவள் என்னையே நீயாக
பாவித்து உன் வரவிற்கு காத்திருப்பாள்..............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Jul-18, 3:05 pm)
பார்வை : 93

மேலே