கண்ணீர்த்துளிகள்

குளிர்காலத்தில்
போர்வையாய்
இருக்கும் உன்
நினைவுகள்
கோடைகாலத்தில்
குளிர் தென்றலாய்
மாறிவிடுகிறது!

இதென்ன பழக்கம்
உனக்கு?
நினைவுகளை என்னிடம்
அனுப்பிவிட்டு
தொலைவில் இருந்து
கண்காணிப்பது!

ஓசை பிடிக்கும்
இசை பிடிக்கும்
மொழி பிடிக்கும்
யாரிடமாவது
அளவாவ பிடிக்கும்
எனக்கு!

மௌனம் மட்டுமே
பிடிக்குமோ?
உனக்கு!

உன் உருவம்
மறையும் வரை
பார்த்துவிட்டுத்தான்
வீடு திரும்புகிறேன்
கண்களுக்குள்
ஒட்டிக்கொண்டு
மீண்டும் என்னுடனே
வந்துவிடுகிறாய்!

கருமேகத்தை
மையாக்கி
பேனாவிற்குள்
செலுத்தினேன்
கவிதைகளாய் என்
கண்ணீர்த்துளிகளை
சிந்துகின்றது அது!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (9-Jul-18, 2:22 am)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : kanneerthulikal
பார்வை : 105

மேலே