ஆகாயம் என் வசம்
நீல முகிலை
நீந்தி கடக்கிறேன்!
நிலவின் கன்னம் தொட்டு
வண்ணம் கவர்கிறேன்!
வழியில் கண்ட
வானவில்லை
தீண்டி செல்கிறேன்!
வீசி சென்ற
தென்றலோடு
சிநேகம் வளர்க்கிறேன்!
விண்மீன் பறித்து
மாலை கோர்க்கிறேன்!
கழுத்தில் அணிந்து
இதழில் சிரிக்கிறேன்!
சாரல் மழையை
அள்ளி வந்து
முத்தம் வைக்கிறேன்!
முழுதாய் தொலைகிறேன்
மீண்டும்
புதிதாய் மலர்கிறேன்!