மந்திரங்கள்

அனாவும்,மனாவும்
கூட ,அம்மா உருவாகிறான்
'அம்மா' என்று அழைத்தால்
அன்னையின் அன்பு கிடைக்கும்
இப்படியே, 'அ','உ''ம' கூட
'ஓம்' எனும் பிரணவ மந்திரம்
உருவாகும்; இப்படித்தான்
அட்சரங்கள் இணைந்து
உயிர்பெற்று 'மந்திரங்கள்'
உருவாகுதே , எப்படி
அணுக்கள் இணைப்பில்
சக்தி வெளிப்படும் அதுபோல;
ஆதியில் வேடுவன் வால்மீகி
மாமுனி நாரதன் வாக்கேற்று
'ரா', 'ம' என்றெழுத்துக்களை
மாறாக , 'ம்' 'ரா' என்று நெஞ்சில் இருத்தி
மாதவம் செய்ய, இவ்விரண்டெழுத்தும்
சேர்ந்து, 'ராமா' என்ற தாரக மந்திரம்
நமக்களித்து, மாகாவியம்
ராமாயணமும் மலர்ந்தது.

சர்வ வல்லமைபொருந்திய
எழுத்துக்களின் சேர்க்கைதான்
மந்திரங்கள் , அவற்றை ஓதும்
நெறியறிந்து ஓதிட அவை
தந்திடும் நல்லவை எல்லாம் நமக்கு.

'அகரமுதல் எழுத்தெல்லாம் ஆதி
பகவான் முதற்றே உலகு '- வள்ளுவன் குறள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Jul-18, 2:48 pm)
பார்வை : 67

மேலே