தலைவி தென்றலை தூது விடுதல்

அவன் வரவிற்காக காத்திருந்தேன்
அந்தியும் போய் இரவும் வந்தது
பறவைகளின் ஒலியும் நின்றுபோனது
இருள் மெல்ல சூழ, நிசப்தம் .........
சுவற்றுக் கோழி சப்தம் இருளைக்கிழித்து ஒலிக்க
இரவின் இருட்டு அச்சுறுத்த
அவன் இன்னும் வரவில்லையே .........என்னவன்
என் நெஞ்சில் நிறைந்தவன் ..........
தாரகைகள் மின்மினுக்க
நீல வானில் வைரக்கற்களென,
நிலவும் வந்தது தன்னொளி பரப்பி
என்னவன் இன்னும் வரவில்லையே
அவன் என் கைகளை அள்ளிக்கொண்டு
தன மார்பில் அணைத்திடுவான் என்றெண்ணி
கையிலிட்ட மருதாணியும் வாடி விழுந்திட
உள்ளங்கைகள் சிவக்க வில்லையே, ஏனோ
என்னைவிட்டு போனவன் என்னவன்
இன்னும் வரவில்லையே , ஒரு வேளை
வாராமல் போய்விடுவானோ- மருதாணி
இட்ட கை சிவக்கவில்லையே ...........
அப்படி இன்று அவன் வாராது போயின்
என் உயிர் தாங்காதே அவன் பிரிவை .....
தென்றலே, உனக்கென்ன வேலை இங்கு
போ போ, என் மன்னவனை அழைத்து வா
என்னிடம் சேர்த்துவிடு.....................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Jul-18, 2:32 am)
பார்வை : 158

மேலே