இடையே

நாவிற்கும் சொற்களுக்கும்
இடையே அமைகிறது
சொர்க்கமும் , நரகமும்
.
நாசிக்கும் சுவாசத்திற்கும்
இடையே அமைகிறது
வாழ்வும் , சாவும்
.
ஆசைக்கும்,வைராக்யத்திற்கும்
இடையே அமைகிறது
செழுமையும், வறுமையும்
.
உழைப்புக்கும்,முயற்சிக்கும்
இடையே அமைகிறது
வெற்றியும்,தோல்வியும்
.
கல்விக்கும்,அறிவுக்கும்
இடையே அமைகிறது
ஞானமும்,அஞ்ஞானமும்.
.
நேசத்திற்கும்,வேஷத்திற்கும்
இடையே அமைகிறது
காதலும்,காமமும்

எழுதியவர் : வெங்கடேஷ் (11-Jul-18, 4:11 pm)
பார்வை : 202

மேலே