காதல் கற்பனை
காலை வேளையில் இன்று,
உனக்கு முன் வந்து என்னை எழுப்பியதடா மழை
தினமும் விழித்தும் விழிக்காமலும் உன்னை தேடும் கண்கள் இன்று ஜன்னல் ஓரமாய் திரும்பியது
பச்சை இலைகளில் படுத்துக் கொண்டும்
ஜன்னல் கம்பிகளில் தொங்கிக் கொண்டும் விளையாடும் இந்த விண்துளிகள் தான் எத்தனை அழகு!
என்னையே மறந்து உன்னையே பார்க்கிறேன் அழகே !
அவ்வப்போது என் முகம் தடவும் சாரல் எப்போது என்னுடன் நனைய வருவாய் என ஏக்கமாக பார்க்கிறது
நானும் நனைகிறேன் வா வெளியே என ஆனந்தக் கூச்சல் போடுகிறதோ எதிர் வீட்டு சுவர்
எத்தனையோ கற்பனைகள் எனக்குள்ளே
காற்றும் மழையும் சேர்ந்து காதல் செய்ததால் பிறந்ததோ இந்த சாரல்?
மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டேன்
தீடீர் என என் இடையை பிடிக்கிறது ஒரு கை கன்னம் தொடுகிறது ஒரு இதழ்
வந்துவிட்டான் ........
காலை முதல் கண் உறங்கும் வரை காதலை மட்டும் பொழிகிறவன்
காபி இல் தொடங்கி கற்பனை வரை எனக்கு பிடித்த என் ரசிகன்
என் ரசனைகளின் மொழி இவன்
என் கவிதைகளின் காரணம் இவன்
நான் தனிமையில் ரசித்த மழை வேகம் கூட்டுகிறது என் துணையை கண்டவுடன்....
காலை வேளையை காதல் வேளையாக வரைகிறார்கள் இந்த மழையும் ,என் மணவாளனும் ....
உன்னுடன் பயணிக்கும் ஒவ்வொரு கணமும் காதலால் பிறந்து கொண்டே தான் இருக்கும் என் கவிதைகள்....
மழை அழகு தான் ஆனால் என் மணவாளன் அளவுக்கு இல்லை
இன்றைய நாளும் கவிதை ஆனது அவனால்.....