ஆல்ப்ஸ் மலைக் கோடாரி...

ஆல்ப்ஸ் மலைச் சரிவில்
ஊசியிலைக் காடுகளினூடே
ஐய்யாயிரம் ஆண்டுகள்
அயர்ந்து உறங்கிய
மரவெட்டியின் பித்தளைக் கோடாரி
கூர் முனையோ
நின் பார்வை...

யுகங்கள் கடந்து
எனைச் சிதைக்கிறதடி...

~☆~

எழுதியவர் : முத்தரசு மகாலிங்கம் (12-Jul-18, 7:58 pm)
சேர்த்தது : முத்தரசு
பார்வை : 97

மேலே