புன்முறுவல்

புன்முறுவல் அடுத்தவரின் அன்பை
பகிர்ந்து கொள்ளும் அழகிய இலேசான ஆயுதம்
கடுகடுப்பான முகத்தில் புன்முறுவல் பூத்து விட்டால்
அதன் மதிப்பு கோடி பெறும்
புன்முறுவல் இதழ் சிந்தும் அற்புதக் கலை
எத்தனை எத்தனை பயிற்சி கொடுத்துப் பெற்றுக்கொள்ளும்
கலைகளின் மத்தியில்
புன்முறுவல் பெற்றுத் தரும் வெற்றியோ விலைமதிப்பற்றது

வாய் திறந்து சிரிக்கும் சிரிப்பால்
உடல் முழுவதும் ஆரோக்கியம் பெறுகின்றது
ஆனால் வாய் மூடி இதழ் கூடி உள்ளூர சிரிக்கும் இந்த புன்சிரிப்பால்
மனம் முழுதும் ஆரோக்கியமாகின்றது
புன்முறுவலால் மனிதனின் உண்மை அன்பு,
நேர்மை, கருணை வெளிக்காட்டப்படுகிறது
இது தெய்வீக சிரிப்பு அன்பான உள்ளங்களை ஆட்கொள்ளும் சிரிப்பு

அன்புள்ள அன்னையின் முகத்தில்,
ஆசையுள்ள மனைவியின் முகத்தில்,
பாசமுள்ள அண்ணன் முகத்தில் ,
அக்கறையுள்ள அயலவர் முகத்தில் ,
நேசமுள்ள உறவினர் முகத்தில் பூக்கும் இந்த புன்சிரிப்பு
புத்துணர்வு மிக்கது, பூத்துக் குலுங்கும் புன்சிரிப்பால்
பூக்களாக நிறைந்து காணும் இப்பூவுலகம்.

புன்முறுவல் பூக்கும் இடமெங்கும்
போரும் இல்லை பொறாமையும் இல்லை .
புன்முறுவல் இதழ்களிலே தவழ்ந்து வர
மக்கள் மனமெல்லாம்
அமைதியெனும் தென்றலிலே
அசைந்து ஆட வதனமெங்கும்
பூரிப்பாய் புன்முறுவல்

எழுதியவர் : பாத்திமாமலர் (14-Jul-18, 11:47 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : punmuruval
பார்வை : 31
மேலே