வேறுஎங்குமில்லை ஏட்டில்மட்டும்
கைகளை அசைத்ததே ஆட்டத்தின் அரங்கேற்றம் ஆனது
குழந்தை பருவத்தில்
திக்கி திக்கி உளறியதே தித்திக்கும் மேடை பேச்சானது
குழந்தை பருவத்தில்
புன்னகையே புகலிடம் கொண்டிருந்தது
குழந்தை பருவத்தில்
பருவ மாற்றங்கள் மாற்றியது பருவத்தை மட்டுமில்லை
குழந்தை குமரியானேன் சமுதாயத்திற்கு
குழந்தை சிரிப்பு இங்கு தப்பு என்று உணர்த்தியது சமூகம்
மேடை பேச்சு பேசமுடியாது மூடிவைத்து
பெண்டிர்க்கு எதற்கு இவ்வளவு வாய் என்று
அன்றும் அனைவரின் பார்வையும் என்மீது
இன்றும் விழிகளின் பதிவுகள் என்மீது இல்லை இல்லை அங்கங்களில்
குழந்தைப்பருவத்தின் சைகைகளை ரசித்த உலகம்
பழசைகைகளை காட்டுகிறது குமரியான குழந்தைக்கு
புன்னகையின் புகலிடம் வெற்றிடம் ஆனது
குமரியின் புன்னகை புகழப்படாதது கண்டு
குழந்தை குழந்தையாய் இருப்பது தாய்க்கும் தகப்பனுக்கும் மட்டும்
மாறிவிட்டது உலகம்
உரிமைக்கு ஏங்கும் பெண்ணுக்கும் சமஉரிமை தந்து விட்டது உலகம்
எங்கும் இல்லை ஏட்டில் மட்டும்