காளை இதயம்

செம்மாதுளையை
உன்னிதழ்களில்
துண்டு துண்டாக
வெடிக்கிறாய்
நீ சிரிக்கும் போது ,
அப்போது அங்கே
ஒழித்து வைத்த
வெண்பவழ முத்துக்கள்
உள்ளே ஒளிர்வது போல்
தோன்றுதடி பல்வரிசை.
சேலையை எடுத்து
உன் இடை இடுக்கில் வைக்கிறாய்
களை எடுக்க நீ செல்கையில்
என்னையும் சேர்த்தல்லவா
அங்கே நீ சொருகுகிறய்
தடியடித் தடம் பட்டு
உடல் சுழுக்கும்
இந்த உழவுக் காளையின்
உடல் போல்
என்னிதயமும் இங்கே
உன் பார்வைத் தடம் பட்டு
சுழுக்கி வசைந்து கிடக்குதடி
அஷ்ரப் அலி