மொட்டு விழி

உன் மொட்டு விழி....
மலர்கையிலே ...
சொட்டு நீரும் கசிந்ததடி .......!!!!
பூவிலே தேன்துளியை போல...
உன் செந்தாமரை இலை கன்னத்தில்..
அழகாய் உருண்டோடியதடி ....
கண்ணீர் துளிகள்....!!!!
ஏனோ வர்ணனை செய்ய
மட்டும் மனம் ஏங்கவில்லையடி ....
எனக்கு...
நெடுநாள் பிரிவின் வலியை...
உள்ளமது சுமப்பதை உணர்ந்தேனடி .....
உன்
மலர்விழிகள் இரண்டையும்
கண்ட மறு நொடியிலே .....!!!!
மென்மையான உன் கன்னத்தை...
விரல் கொண்டு வருடவோ.. ...??
(அல்லது)
என்
இதழ் கொண்டு சுவைக்கவோ.......??
சொல்லடி என் சகியே....