சொல்லாத காதல்

வாழ்க்கை என்னும் பயணத்தில்
தொடரும் ஒவ்வொரு உறவும்
ஒருநாள் முடிவு பெறும் -- அதிலும்
சில முடிவை சொல்லாத உறவு
இறுதி வரை உடன் வரும்!
அதுபோன்ற ஒரு உறவினை
இங்கு எடுத்துரைக்கிறேன்.....


பார்த்த நாள்முதலாய்
பரவசமென்று எதையும்
காணவில்லை -- பழகும்
நாட்களில் தான்
படிக்கத் தொடங்கினேன்
உன் பார்வைகளை.....

உன் பார்வை வரிகள்
ஒவ்வொன்றும் என்மீது படும் வேளையில்
ஒவ்வொறு முறையும்
ஒருவித தாக்குதலுக்கு பலியானேன்

எத்திசையில் நீ திரும்பி பார்த்தாலும்
என்னை நோக்குவதை போல்
என்னவென்று தெரியமலே
என்னை இழக்கத் தொடங்கினேன்

சூரியனின் நேர்க்கோட்டில் சந்திக்கும்
நிலவாக நீயும்(அவளும்) நானும்
தனி கிரகத்தில்
தினம் தினம் நின்றோம்

நிற்கும் நாட்களிலெல்லாம்
இருவருக்கும் இடையே
வார்த்தைகள் பரிமாரிக்கொள்ளவில்லை
ஆனாலூம்
கண்களின் வழியே
பல மொழிகள் வழிந்தோடியது!

திங்கள் முதல் வெள்ளி வரை
நாட்கள் கழிவது தெரியாமல் உன்னிடத்தில்
நான் முழுவதுமாக மூழ்கிக்கொண்டிருந்தேன்
"வெள்ளி நிலவே"
உன் விழிகள் என்னிடம்
விடை பெற்றுச் செல்லும்
விடுமுறை நாட்களையெல்லாம்
வெறுத்து நின்று பார்த்தேன்...

ஞாயிறு அது முடியும்போதும்
தொடரும் திங்களோடும்
உன் ஞாபகமோடும்
திசைகள் எல்லாம்
நான் சுற்றி திரிந்தேன்
உன் வருகைக்காக....


தினம் தினம்
உரிமைகள் உன்னிடம் அதிகரிக்க
அதனை அறியாத
என் உள்ளம் உனக்கென்று
முழுவதுமாக என்னை மாற்றியது!!

உள்ளம் முழுமையாக
மாறும் வேளையில் தான்
உயிரே
உனக்கும் எனக்கும்
ஊடல் தோன்ற வேண்டுமா

பார்வை வரிகளை கண்டு
பைத்தியமானவன் அதிலிருந்து
மீண்டுவரும் வைத்தியம் தெரியாமல்
வாயடைத்து நின்றேன்...

"எதிர் பாராமல் வாழ்வில் சந்தித்தேன்
எதிர் பாராமல் காதலித்தேன்
எதிர் பாராமல் காதலித்தது
என் தவறா ? -- இல்லை அதனை
ஏற்க முடியாதது உன் தவறா" என
உன்னிடம் உண்மைகளை
கேட்க வந்தவன் ! கிரங்கி போய் நின்றேன்
உன் மௌனத்தில்!!

"உதடுகளை திறந்து
உள்ளம் புரிந்து சொல்லும்
காதலெல்லாம் சொர்கத்தில் சேரும்!
சொல்லப்படாத இந்த காதல்
எந்த பிரிவை சேரும்"jQuery171019210880183890233_1575038935182??

எந்த பிரிவிலும் சேர்க்க முடியாத
இந்த காதலும் --- சேரமுடியாமல்
பிரியும் நேரம் வந்தது...

அன்பின் ஆசைகள்
பொங்கி வந்த நாளொன்றில்
எதற்கான உரிமைகளும்
உனக்கில்லை என்றா(ய்)ள்!
முதல் முறை உதிரங்கள் கொதித்தது
உயிரில் நீ கலந்த பின்பு
உரிமையில் எல்லைகள்
எனக்கு தெரியவில்லை...

எதைவும் தெரியும் முன்பே
பிரிந்திருக்க வேண்டிய
நேரம் வந்தது.....


தனிமையின் தீயில்
தவிக்க நான் ஆளானேன்...

நொடியிலும் நிமிடத்திலும்
மாறி மாறி
என் மனம் மரணம் அடைந்தது....

நாள்காட்டிகள் எல்லாம்
நான் படும் வேதனையில்
பயணம் செய்ய வந்தது...

மீண்டும் சந்திக்கும் நாள் வந்தது
"மரணதீயில் மறைந்து கிடந்தவன்"
மறுபிறவி எடுக்க ஜனனம் தோன்றியது!
ஜன்னலின் ஓரம்
அந்த நிலவினைக் காண
ஜென்மங்களை கடந்து வந்தேன்!!

காதல் நோயால்சூழப்பட்டவன்
உன் கண்கள் தீண்டும்
ஒவ்வொரு தீண்டலிலும்
விடுபட்டு வெளியே வந்தேன்....

கண்ணியத்தை காத்து வந்த
காதலையும் காலத்தையும்
நாம் புரிந்து கொண்டதால் -- இன்று
பிரிந்து நிற்கிறோமா ??
இல்லை
நாம் இருவரும் பிரிந்து நிற்பதால்
நான் புரிந்துகொண்டேனா ?? என
புரியாமல் புலம்புகிறேன்! பூவே
இந்த புதிரான உலகில்!!

தெற்கில் நீயும்
வடக்கில் நானுமாக திசைகளில்
காவலில் நின்றோம்...

காவலாக காத்து கிடப்பதில்
என்ன பயன் ???
எதற்கும் தான் எனக்கு
காரணங்கள் தெரியவில்லையே!!!!!!

காதல் வந்த போது
காதலென்று அதனை அறிந்துகொள்ள
அறிகுறிகள் ஆயிரம் கிடைக்கின்றது!
ஆனால்
பிரிகின்ற போது ஏனோ
கண்ணீர் வடிக்கின்றது!!

நீயாக நிறைந்து கிடந்த
உயிரெல்லாம் இன்று
தீயாக எரிகின்றதுகொண்டிருக்கின்றது!
வட்டமிட்ட என் வாழ்வில்
திட்டமிட்டவள் எங்கே என்று
அது
தேடித்தவிக்கின்றது!!

இன்பங்களை துறந்து வாழும்
இந்த வாழ்வில்
இன்றும் ஒயவில்லை -- ஓவியமே
உன் பிம்பம்...

வண்ணமற்ற என் இளமையில்
வரையாத உன் உருவம்
என்னை கறையானாக
அறித்துக்கொண்டிருக்கின்றது...

பக்குவம் வந்தாலும்
பகுத்தறிவு வந்தாலும்
பித்தனாக அலைகின்றேன்...
பிரிந்து சென்ற அந்த பார்வை
பிறைநிலவாக ஒருநாள்
ஒளிர வேண்டுமென்று.....

தேடலின் நோக்கம் தெரியாதவன்
"தேவதையே உன்னைத் தேடி"
தெருக்களின் விமர்சனங்களுக்கு
விடையளிக்க வழியின்றி
வாயடைத்து போனேன்....

பாதைகள் நீண்டு கிடந்தது
பாதங்கள் நடக்க தொடங்கியது
"உறங்க நேரமின்றி"
நட்ந்து கொண்டிருந்தவன் வயதில்
இருள் சூழுமென்று
இதயம் நினைக்க மறந்துவிட்டது!!

நினைக்க மறந்து நின்ற
அந்த வேளையிலும்
மறந்தும் உன்னை மீண்டும் மீண்டும்
நினைத்தேன்.....


உன் நினைவொன்று
இருந்தால் போதுமே....

மலரின் மணமாக
மணம் வீசுவேன் என்று
எண்ணம் கொண்டு
உன் நினைவென்றில்
"வார்த்தைகளாக வளம் வந்து
சுமைகள் பல வென்று"
சுற்றி இருந்தவர்களையெல்லாம்
இருள் சூழாமல்
என்னை பார்க்க வைத்தேன்....


இருளில் மூழ்கி கிடந்தவனுக்கு
முழுவதுமாக ஒளியினை கொடுத்து
அவ்வொளியால் உலகில்
உதயமாகும் முன்னே
உயிரே
நீ ஒதுங்கி போன உண்மையை
ஒருபோதும் உணர முடியாமல் தவித்தேன்!!

உண்மையை உணர முடியாமல்
போன பின்பு
உன் வாழ்வில் ஒளியேற்றது?
யாறென்று இவ்வுலகம் கேட்டால்
எப்படி நான் பதிலளிப்பேன்?????

வருடங்கள் சந்திப்பில்
வார்த்தையாக காதலை
நீ சொல்லாத போது
காலங்களுக்கு எப்படி நான்
பதிலளிப்பேன்??????

இருளில் கிடந்த
என் வாழ்விற்கு வெளிச்சத்தை
கொடுத்தவளே!!!
இந்த சமுகம் கேட்கும் கேள்விகளுக்கு
எப்படி நான் பதிலளிப்பேன்?????


இதழை பிரிக்காமல்
மறைத்துக்கொள்ளும் மலரின்
தேன்துளிகள் ஒருபோதும்
தேனிக்களுக்கு கிடைப்பதில்லை! அதுபோல
சொல்லப்படாத காதலெல்லாம்
சுகம் பெறாத சோகத்தையே சாரும்!!
அதில்
இன்று முதல்
சொல்லப்படாத
என் காதலும் சேரும்...!!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (16-Jul-18, 8:16 pm)
Tanglish : sollatha kaadhal
பார்வை : 4204

மேலே