குரு சீடன் உரையாடல் -முந்திரிக்கொட்டை யார், சிரிக்க, சிந்திக்க
குரு : சீடனே , உன் பார்வையை ஒரு சீராய்
ஒரு பொருளின் மீது செலுத்தி உன்
இதயத்துடன் அதை சேர்த்துவிட்டால்
வரும் சக்தியைக்கொண்டு இமயத்தையே
நகர்த்திடலாம்..............
சீடன் : அது எப்படி சாத்தியம் குருவே, நம்பமுடியவில்லை
இது சாத்தியமே அல்ல, அல்ல......
குரு : சீதா, அன்று நீ கேட்டாய் அல்லவா , முந்திரிக்கொட்டை
என்று கூறுவதன் என்று .............இதோ உன் விடையிலேயே
அடங்கி இருக்கு..... எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு........நான்
சொன்னேன் பார்வையின் மெய்யம் ஒரு பொருளில்
ஐக்கியம் ஆக வரும் சக்தியால் சாதனைகள் புரியலாம்
இமயத்தை கூட நகர்த்தலாம் என்று............குரு
சொல்வதை கேள்விகேட்காமல் செய்வது சீடன் கடமை
அதைவிட்டு நீயே ஓர் முடிவுக்கு வந்து ............நான்
சொல்வது சாத்தியம் இல்லை என்றாய்
......... முந்திரிக் கொட்டையாய்.... அதாவது பழத்திற்குள்
அடக்கமாய் இல்லாது , பலத்திற்கு முன்னே கொட்டை
முந்திரியில்................. நீயும் அதுபோல................ஒரு செய்யலை
செய்து முடித்து முடிவு காணாது அவசரம் அடைந்தாய் ,அந்த
முந்திரியில் பழத்தின் முன் கொட்டைபோல்...........