செய்யா துரை

என்னடா துரை, பள்ளியில இருந்து வீட்டுக்கு சந்தோசமா குதிச்சு ஓடி வர்ற?
😊😊😊😊😊
அப்பா, அம்மா தான் எனக்கு தினமும் வீட்டுப் பாடத்தைச் சொல்லிக்குடுத்து எழுத வைப்பாங்க. ஒரு வாரமா அம்மாவுக்கு உடம்பு சரியில்லை இல்லையா?
😊😊😊😊😊
ஆமாம் நான் தான் நம்ம கடை வியாபாரத்தையும் அம்மாவையும்
பாத்துக்கிறேன். நீ வீட்டுப் பாடம் செய்யாம தான் ஒரு வாரமா பள்ளிக்குப் போறயா?
😊😊😊😊
ஆமாங்கப்பா.
😊😊😊😊😊
உன்னோட ஆசிரியர்கள் உன்னக் கண்டிக்கலையா?
😊😊😊😊😊
இல்லீங்கப்பா. இப்பெல்லாம் பையன்களை ஆசிரியர்கள் திட்டினாலோ அடிச்சாலோ சில பையன்கள் தற்கொலை பண்ணிக்கிறாங்களாம். அதனால எங்க ஆசிரியர்கள் அன்பாத்தான் கேப்பாங்க. கோபப்படமாட்டாங்க. திட்டறதும் இல்ல.
😊😊😊😊😊
இன்னிக்கு உன் வகுப்பில என்ன நடந்தது?
😊😊😊😊😊
எங்க தமிழாசிரியர் வகுப்பில வந்த உடனே "வீட்டுப்பாடம் செய்யா துரை இன்றாவது வீட்டுப் பாடத்தை செய்துட்டு வந்தீரா?" ன்னு கேட்டாருங்கப்பா. நான் இல்லன்னு தலையை ஆட்டினேன். "நீர் வழக்கமா வீட்டுப்பாடத்தைச் செய்யா துரை! எப்படி அய்யா வீட்டுப் பாடத்தைச் செய்வீர்?"ன்னு சொன்னாருங்கப்பா.
அதச் சொன்னதுக்கப்பறம் " அய்யா துரை, செய்யா துரை, வீட்டுப் பாடத்தைச் செய்யா துரை"ன்னு பாட்டுப் பாடுனாருங்கப்பா. உடனே எங்க வகுப்பில உள்ள எல்லாரும் சிரச்சுட்டாங்கப்பா. நானும் சிரச்சுட்டேம்பா.
😊😊😊😊
அப்பா, மகனே செய்யா துரை இன்னிக்காவது நீயே உன்னோட வீட்டுப் பாடத்தைச் செய். அம்மாவுக்குத் தொல்லை தராதே. நாங் கடைக்குப் போய்ட்டு ஒம்பது மணிக்கு வர்றேன்.
😊😊😊
என்னப்பா நீங்களும் என்னைச் "செய்யா துரை" ன்னு சொல்லறீங்க.
😊😊😊😊😊
??????
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
திரைத் தமிழைத் தவிர்ப்போம். திரையாளிகள் போல் தமிழ் ஆர்வலர்களான நாமும் அவர்கள் பணியைச் செய்யலாகாது.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

எழுதியவர் : மலர் (17-Jul-18, 9:54 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 85

மேலே