பாட்டி-பேத்தி-மகன் உரையாடல்

பாட்டி ( ஒரு தமிழ் குக்கிராமத்தில் பேத்தியிடம்)

ஏண்டி , என் பேத்தியே எப்போதடி நீ மும்பையிலிருந்து வந்த
உன் பெரு அதான் உங்கப்பன் என் மவன் ஏதோ நூறுன்னு
கூப்பிடறானே..............அந்த நூறுதானடி நீ ......அது என்னடி நூறு
ஐநூறுன்னு பெரு, ஒங்கப்பனுக்கு நம்ம தமிழ் பெரு ஒன்னும்
வைக்க தோனலயா..........

பேத்தி :பாட்டி இதோ டாடி வந்திட்டுருக்கார் கேட்டுக்கோ அவரையே

பாட்டி (பையன பார்த்து) : ஏண்டா கோபாலு.... எப்போ வந்த
அது என்னடா என் பேதி பெரு நூறு......

கோபால் : அம்மா, அதுவா... நூர் நா நம்பர் இல்ல, நூற்நா
பேரொளி னு அர்த்தம் ....பிரகாசம் .....அதான் வெச்சேன்

பாட்டி : தமிழில் ஒளிநீ னு வெக்கலாமே............அது சரி
அவ நெத்திலி போட்டு இல்ல, போட்டிருக்கிற உடை
பாவாடை-தாவணி இல்லாம, ஏதோ அசலூர் உடையா
இருக்கே, நம்ம ஊருக்கு சீதோசனமா பார்த்தாலும்
சேராத உடையா இருக்கேடா.......இப்படியா நம்ம
கலாச்சாரம் காணாம போகுதே ............மனசு
கஷ்டப்படுது...................

கோபால் : அதெல்லாம் ஒன்னும் இல்ல, நாம எங்க இருக்கோமோ
அந்த இடம் தகுந்தவாறு வாழனும் ......

பாட்டி : எப்படியோ போ எனக்கு இது சரினு தோணல

எழுதியவர் : சைவன்-தமிழ்பித்தன்-வாசுத (17-Jul-18, 5:06 am)
பார்வை : 100

மேலே