சித்துவேலை தெரியுமா

நீ யாரூட்டுப் பையன்டா கண்ணு? இதுவரைக்கும் உன்னப் பாத்ததில்லை..ஊருக்குப் புதுசா?
☺☺☺☺☺☺
பாட்டிம்மா நான் குஜராத்திலிருந்து என்னோட அம்மா அப்பாகூட வந்திருக்கேன். இந்தத் தெருவில இருக்கிற கடைசி வீடுதான் எங்க தாத்தா வீடு
😊😊😊😊😊
அடடா. நீ கண்ணுச்சாமி பேரனா?
😊😊😊😊😊
ஆமாங்க பாட்டிம்மா.
😊😊😊😊😊
குசராத்திலிருந்து வந்திருக்கிற. குசராத்து மொழில பேசத்தெரியுமா?
😊😊😊😊
நான் பொறந்து வளந்திட்டிருக்கிறதே குஜராத்திலே. குஜராத்துக்காரங்க மாதிரியே அந்த மொழியை நல்லாப் பேசுவேன்.
😊😊😊😊
சரி, உம் பேரு என்னடா கண்ணு?
😊😊😊😊😊
எம் பேரு அப்ஜித்.
😊😊😊😊😊
அப்பு சித்தா? சித்துவேலையெல்லாம் தெரியுமா.
😊😊😊😊
சித்துவேலைனா என்னன்னு எனக்குத் தெரியாதுங்க பாட்டிம்மா. சித்தர்களப் பத்தி அப்பா சொல்லிருக்காரு.
😊😊😊😊
உனக்கு ஏண்டப்பா இந்திப் பேர வச்சிருக்காங்க.
😊😊😊😊😊
இந்தச் சின்ன கிராமத்தில ஒருத்தரு பேருகூட தமிழ்ப் பேரா இல்லை. குஜராத்தில பொறந்து வளர்ற எனக்கு மட்டும் எதுக்குத் தமிழ்ப் பேர வைக்கணும்.
😊😊😊😊😊
நீ சொல்லறதும் சரிதாண்டா சாமி
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க.
தமிழுணர்வை வளர்க்க
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Abjit = conquering water.

எழுதியவர் : மலர் (16-Jul-18, 3:14 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 122

மேலே